நாட்டில் ஓமிக்ரான் தொற்றுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நிபுணர்களும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு பரிசிலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பிரதமர், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவத்தின் அடிப்படை உண்மையை, இந்த கொரோனா பலருக்கு உணர்த்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் மக்களிடையே உரையாடி வருகிறார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது
கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு செய்யும் தளமான கோவினில் தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழக அரசு இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்த போர்டலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆரோக்கிய சேது செயலி இனி தடுப்பூசி நிலை குறித்த புதுப்பித்தல்களையும் உங்களுக்கு அளிக்கும். உங்கள் அருகில் உள்ளவர்களில் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டார்கள் என்பதையும் இனி அறிய முடியும்.
18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கோவின் (CoWIN) போர்ட்டல் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. எனினும், இந்த விதியை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றிவிட்டது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சற்றேஎ மந்தமாகியிருக்கிறது. ஆனால், தொற்றுநோயின் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து கணக்கெடுத்தால், உலகிலேயே அதிக பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கோவின் தளத்தின் (cowin.gov.in) தரவுகளின்படி, இதுவரை 21 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரத்து 406 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர். இவர்களில் 26 லட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் மட்டுமே இன்று (திங்கள்கிழமை) பதிவு செய்துள்ளனர்.
பல பயனர்கள் அளித்த புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Covid-19 Vaccine Registration Online: கொரோனா தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி பெற பதிவு செய்வது மிகவும் எளிதானது. இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது cowin.gov.in வலைத்தளத்திற்கு சென்று, சில வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தடுப்பூசிக்கான பதிவை 1 நிமிடத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதம் முதல் தேதியில் இருந்து,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருத்தது அனைவருக்கும் சற்றே ஆறுதலை கொடுத்ததது.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.