LIC பென்ஷன் திட்டம்... மாதம் ரூ. 5000 டெபாசிட்! வருமானம் இவ்வளவா?

LIC New Pension Plus Scheme: எல்ஐசியின் இந்த புதிய பென்ஷன் பிளஸ் பாலிசியை ஒற்றை பிரீமியம் செலுத்தியோ அல்லது வழக்கமான பிரீமியம் செலுத்தும் முறையின் மூலமாகவோ வாங்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 28, 2023, 02:28 PM IST
  • இதில் ஒருமுறை பிரீமியம் செலுத்துவதற்கு குறைந்தபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும்.
  • இதில் குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.3000 ஆகும்.
  • இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்ச வயது 75.
LIC பென்ஷன் திட்டம்... மாதம் ரூ. 5000 டெபாசிட்! வருமானம் இவ்வளவா? title=

LIC New Pension Plus Scheme: நாட்டின் பெரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி வழங்கும் புதிய பென்ஷன் பிளஸ் என்பது பங்குபெறாத யூனிட்-இணைக்கப்பட்ட ஒரு தனிநபர் ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், பிரீமியம் செலுத்தும் ஆண்டுகளில் திரட்டப்பட்ட கார்பஸ் வழக்கமான வருமானமாக மாற்றப்படுவது கூடுதல் சிறப்பாகும். 

எல்ஐசி வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை ஒற்றை பிரீமியம் செலுத்தியோ அல்லது வழக்கமான பிரீமியம் செலுத்தும் முறையின் மூலமாகவோ வாங்கலாம். வழக்கமான பிரீமியம் பாலிசியின் கீழ், எல்ஐசி இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி, பாலிசியின் காலப்பகுதியில் பிரீமியங்கள் செலுத்தப்படும். 

முதலீட்டு விருப்பங்கள்

இந்த திட்டத்தின் கீழ் நான்கு முதலீட்டு விருப்பங்கள் உள்ளன என தெரிகிறது. இந்த விருப்பங்கள் ஓய்வூதிய வளர்ச்சி நிதி, ஓய்வூதிய பத்திர நிதி, ஓய்வூதிய பாதுகாப்பான நிதி மற்றும் ஓய்வூதிய சமநிலை நிதி. புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் கீழ் ஒருமுறை பிரீமியம் செலுத்துவதற்கு குறைந்தபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும். வழக்கமான பிரீமியமாக இருந்தால், குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.3000 ஆகவும், குறைந்தபட்ச வருடாந்திர பிரீமியம் ரூ.30,000 ஆகவும் இருக்கும். அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தை வாங்க குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்ச வயது 75.

மேலும் படிக்க | ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 2.5 லட்சத்தை வட்டியாகவே பெறலாம்... அசத்தல் திட்டம்!

பாலிசியின் கால அளவு என்ன

குறைந்தபட்ச பாலிசி காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 42 ஆண்டுகள் ஒற்றை மற்றும் வழக்கமான ஊதிய கால அளவாகும். எல்ஐசி இணையதளம் இத்திட்டத்தின் ஆன்லைன் கால்குலேட்டரை வழங்குகிறது, இது பாலிசி காலத்தின் முடிவில் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி மதிப்பு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு விருப்பம் மற்றும் முதலீட்டின் எதிர்பார்க்கப்படும் வருமானத்தைப் பொறுத்து பயன்படுத்த முடியும்.

உதாரணத்திற்கு, ஓய்வூதிய வளர்ச்சி நிதியின் கீழ் ரூ. 5 ஆயிரம் மாதாந்திர பிரீமியத்தின் நிதி மதிப்பு 20 ஆண்டுகளில் 8 விழுக்காடு வருமானம் என்று வைத்துக் கொண்டால் ரூ.23 லட்சமாக இருக்கும் என்று எல்ஐசி கால்குலேட்டர் காட்டுகிறது. 4 விழுக்காடு வருமானம் இருந்தால், 20 ஆண்டுகளில் ஃபண்ட் மதிப்பு சுமார் 15 லட்சமாக இருக்கும். 35 ஆண்டுகளில், ஃபண்ட் மதிப்பு 8 விழுக்காடு வருமானத்தில் ரூ.75 லட்சமாகவும், 4 விழுக்காடு வருமானத்தில் சுமார் ரூ.32 லட்சமாகவும் இருக்கும்.

ரூ.10,000 மாதாந்திர பங்களிப்பிற்கு, 8 விழுக்காடு வட்டியில் நிதி மதிப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 46 லட்சமாகவும், 4 விழுக்காடு வருமானத்தில் ரூ. 30 லட்சமாகவும் இருக்கும். மேலும் ரூ. 10,000 மாதாந்திர பங்களிப்புக்கு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 8 விழுக்காடு வட்டியில் நிதி மதிப்பு சுமார் ரூ. 28 லட்சமாகவும், 4 விழுக்காடு வருமானத்தில் ரூ. 21 லட்சமாகவும் இருக்கும்.

இதேபோல், எல்ஐசி கால்குலேட்டரின்படி, ரூ. 5 ஆயிரம் மாதாந்திர பங்களிப்புக்கு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 8 விழுக்காடு வருமானத்தில் நிதி மதிப்பு சுமார் ரூ. 14 லட்சமாகவும், 4 விழுக்காடு வருமானத்தில் ரூ. 10 லட்சமாகவும் இருக்கும். 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் என்ற ஒரு பிரீமியத்தின் நிதி மதிப்பு தோராயமாக ரூ.93 லட்சமாக இருக்கும்.

மேலும் படிக்க | ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் போதும்... மாதம் ரூ. 70 ஆயிரம் வரை கிடைக்கும் - அது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News