தம்பதிகளுக்கான டிப்ஸ்: சண்டையின் போது ‘இந்த’ விஷயங்களை தப்பித்தவறிகூட பேசிடாதீங்க!

Avoid These Words While Arguing: தங்களுக்குள் சண்டை வரும் போது, திருமணம் ஆன தம்பதிகள் பேசும் வார்த்தைகளால் அவர்களின் உறவிலேயே விரிசல் விழ வாய்பிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2023, 02:31 PM IST
  • தம்பதிகளுக்குள் சண்டை வருவது சகஜம்.
  • சண்டையின் போது சில வார்த்தைகளை உபயோகிக்ககூடாது.
  • இதனால் உறவில் விரிசல் விழுந்து விடும்.
தம்பதிகளுக்கான டிப்ஸ்: சண்டையின் போது ‘இந்த’ விஷயங்களை தப்பித்தவறிகூட பேசிடாதீங்க! title=

காதல் உறவாக இருந்தாலும், திருமண உறவாக இருந்தாலும் அந்த உறவில் சண்டை ஏற்படுவது சகஜமான விஷயமாக இருக்கும். இதனால் உறவு பலப்படும் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், சண்டையின் போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் சமயங்களில் நமது அன்புக்குரியவர்களை மனதளவில் மிகவும் காயப்படுத்திவிடும். உறவுகளில் விவாதங்கள் வெடிக்கும் போது, ​​நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் விஷயங்களை சிறப்பாகவும் ஆக்கலாம் அல்லது மோசமாக்கலாம். அதிலும், விவாதம் முற்றிப்போனால் பல பிரச்சனைகளை தம்பதிகள் சந்திக்க நேரிடும். அதனால், குறிப்பிட்ட சில வார்த்தைகளை உங்களது சண்டையின் போது தவிர்த்துவிடுவது நல்லது. 

1.தொடர் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டாமல் இருத்தல்..

உங்களது அன்புக்குரியவர் செய்யும் ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அது சரியான விஷயம் அல்ல என்று தோன்றினாலோ அதை அப்போதே அந்த இடத்திலேயே அவரிடம் தெளிவுபடுத்திவிட வேண்டும். இதனால், சண்டை வரும் போது உங்களுக்கு அவரிடம் பிடிக்காத விஷயத்தை அடுக்கடுக்காக எடுத்து வைப்பீர்கள். அப்போது அவரது மனதில், ‘இதையெல்லாம் ஏன் அப்போதே சொல்லவில்லை’ என்று தோன்றும். இதனால், அதை சண்டையின் போது செய்வதை தவிர்க்க வேண்டும். 

2.பழி போடக்கூடாது:

சண்டை வரும் தருணங்களில் பழியை ஒருவர் மீதே போடுவது ஒரு விரோதமான சூழலை உருவாக்குகிறது, இது, பரஸ்பர புரிதலுக்கான எந்த வாய்ப்பையும் தடுத்துவிட வாய்ப்புள்ளது. ஒருவரைக் குற்றம் சாட்டுவது ஆக்கபூர்வமான தகவல்தொடர்புக்கான சாத்தியத்தை முடக்குவது மட்டுமல்லாமல் பொறுப்புக்கூறலையும் திசைதிருப்புகிறது. சண்டை என்றால், அதற்கு ஒருவர் மட்டும் காரணமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது என்ன தவறு உள்ளது என்பதை ஆராய்ந்து அது இனி நடக்காமல் பார்த்துக்கொள்வேன் என உங்கள் பார்ட்னரிடம் தெரிவியுங்கள். 

மேலும் படிக்க | விமானத்தில் பயணம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்!

3.அப்போவே சொன்னேன்..கேட்டியா?

உங்களது அன்புக்குரியவர், ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்னர் உங்களிடம் வந்து கலந்தாலோசித்திருப்பார். அப்போது அது உங்களுக்கு சரியல்ல என்று தோன்றியிருந்தால் அதற்கு எதிரான கருத்துகளை கூறியிருப்பீர்கள். அதையும் மீறி அந்த முடிவை எடுத்து அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேர்கையில் பலர் அவர்களது பார்ட்னரிடம் உபயோகிக்கும் வாக்கியம் ‘அப்போவே சொன்னேன் கேட்டியா?’ என்பதுதான். இதனால், அவர்கள் மனதில் உள்ள வடு இன்னும் ஆழமாக மாறும். அதனால், சண்டையின் போது மட்டுமன்றி சாதாரண தருணங்களிலேயே இதுபோன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. 

4.அமைதியாக இருக்க சொல்லி கூறுவது..

சண்டையின் போது, "அமைதியாக இரு" என்று சொல்வது மற்ற நபரின் உணர்வுகளை புன்படுத்தும் வகையில் இருக்கும். இதனால், அவர்கள் தனது உணர்ச்சிகள் தேவையற்றவை அல்லது பகுத்தறிவற்றவை போல இருப்பதாக உணர்வர். இது அவர்களின் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக, ஆதரவாக நிற்பதும் அவர்களின் உணர்ச்சிகளை சரிபார்ப்பதும் திறந்த உரையாடலுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்க உதவுகிறது. 

5.எதுவும் பேசாமல் கடந்து செல்வது:

சண்டையிடும் இருவரில் யாரேனும் ஒருவர் அமைதியாக இருந்தால், அந்த சண்டை மேலும் வலுபெறாது என கூறுவர். இது ஒரு வகையில் உண்மை என்றாலும், சண்டையில் ஒருவர் பல கேள்விகளை கேட்கும் போதோ, அல்லது பேசிக்கொண்டிருக்கும் போதோ அதை காதில் வாங்கியும் வாங்காதது போல கடந்து செல்வது தீர்வாக அமையாது. மாறாக, இது மேலும் கோபத்தை தூண்டி விடும். எனவே, உங்களுக்கு அந்த சண்டையில் பேச பிடிக்கவில்லை என்றால்,‘இது குறித்து பின்னர் பேசலாம்’ என்று கூறுவது ஒரு வித புரிதலை உருவாக்கும்.

மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News