விமானத்தில் செல்வது அதிக செலவு என்றாலும், நேரத்தை அதிகம் மிச்சப்படுத்தும். இதனாலும் பலரும் கடைசி நிமிட பயணத்திற்கு பெரும்பாலும் விமானத்தை பயன்படுகின்றனர். பொதுவாகவே விமான நிலையத்தில் உள்ளே சென்றதில் இருந்து, விமானத்தில் பயணம் செய்து வெளியே வரும் வரை பல்வேறு விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். இருப்பினும் இதனையும் தாண்டி விமானத்தில் பயணம் செய்யும் போது நாம் செய்ய கூடாத சில விஷயங்கள் உள்ளன. எனவே அடுத்த முறை நீங்கள் பயணிக்கும் போது இந்த தவறுகளை செய்வதைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க | கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது!
- விமானத்தில் செல்லும் போது உங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கிய விஷயங்களில் ஒன்று. நீங்கள் ஐரோப்பா அல்லது ஆசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றால் மட்டுமே உணவு வழங்கப்படும். மற்ற விமானங்களில் உணவுகள் வழங்கப்படாது.
- விமானத்தில் பயணிக்கு போது நமது தனிப்பட்ட சுகாதாரத்தை கவனிக்க வேண்டியது அவசியம். பலர் விமான இருக்கையில் இருக்கும் போது நகங்களுக்கு வண்ணம் பூசுகின்றனர். மேலும் விமானத்தில் பல் விலக்குவது, எச்சில் துப்புவது போன்றவற்றை செய்கின்றனர். இவை பொது சுகாதாரத்தை பாதிக்கும்.
- அடுத்து விமானத்தில் ஒருபோதும் வெறுங்காலுடன் நடக்க வேண்டாம். பல பயணிகள் விமானத்தில் தங்கள் காலணிகளை கழற்றுகிறார்கள். விமானத்தில் எப்போதும் காலணிகளை அணியுங்கள், நீங்கள் கழிப்பறைக்கு செல்லும் போது இது மிகவும் முக்கியமானது.
- விமானத்தில் மதுவை கொண்டு செல்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பயணம் செய்யும் போது ஸ்பிரிட்கள், ஒயின்கள் அல்லது பீர்களை நீங்கள் கொண்டு சென்றால், அவை அனைத்தும் சரியாக உடைந்திடாதா படி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயங்களில் கூடுதல் மதுவை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படலாம்.
- மேலும் பயணிகள் தங்களின் பொருட்களை சீட்டின் மேல் உள்ள கபோடில் வைக்கும் படி விமான பணி பெண்களிடம் கேட்காதீர்கள். நமது பொருட்களை தூக்கும்போது விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தால், அந்த சூழ்நிலையில், விமானப் பணிப்பெண்கள் மருத்துவ விடுப்பு பெற முடியாது.
- ஹெட்ஃபோன்கள் இல்லாமல் மொபைல் அல்லது லேப்டாப்பை பயன்படுத்த வேண்டாம். பயணிகள் எப்போதும் ஹெட்ஃபோன்களை விமானத்தில் பயன்படுத்த வேண்டும். பலரும் பல்வேறு காரணங்களுக்காக விமானத்தை பயன்படுத்துகின்றனர். தேவையில்லாத சத்தம் சக பயணிகளை எரிச்சல் அடைய செய்யலாம்.
- விமானத்தில் சீட்பெல்ட் அணிவதை புறக்கணிக்காதீர்கள். சீட்பெல்ட் அணிவது அனைவரின் பாதுகாப்புக்கும், காயங்களைத் தடுப்பதற்கும் ஒரு வழி ஆகும். அதே போல தேவையில்லாமல் விமானத்தில் எழுந்து நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- விமானப் பணிப்பெண்ணின் கவனத்தை ஈர்க்க அவர்களை தொந்தரவு செய்ய கூடாது. அவர்களை அடிக்கடி கூப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும். உங்களுக்கு அவசரமாக ஏதாவது தேவைப்பட்டால், உங்கள் இருக்கைக்கு மேலே உள்ள அழைப்பு பொத்தானை அழுத்தவும். அதே போல குப்பை அல்லது சாப்பிட்ட பொருட்களை நாமே குப்பை தொட்டியில் போடுவது நல்லது, பணிப்பெண்களிடம் இந்த வேலைகளை சொல்ல கூடாது.
மேலும் படிக்க | விதிகளை மாற்றிய IRCTC.. ரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் கட்டாயம் படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ