Post Office: அஞ்சலகத்தின் சூப்பர்ஹிட் சேமிப்பு திட்டங்கள்

கொரோனா நெருக்கடியின் மத்தியில், முதலீடு செய்யும் தங்கள் பணத்திற்கு நல்ல வருவாய் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தபால் அலுவலகத் திட்டங்கள் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2021, 01:27 PM IST
  • அஞ்சலகத்தின் சூப்பர்ஹிட் சேமிப்பு திட்டங்கள்
  • தேசிய சேமிப்பு சான்றிதழ்
  • சுகன்யா சம்ரிதி யோஜனா
Post Office: அஞ்சலகத்தின் சூப்பர்ஹிட் சேமிப்பு திட்டங்கள் title=

தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டங்கள் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் மிகவும் பலனளிப்பவை எவை என்று தெரிந்துக் கொள்வோம்.  

கொரோனா நெருக்கடியின் மத்தியில், முதலீடு செய்யும் தங்கள் பணத்திற்கு நல்ல வருவாய் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தபால் அலுவலகத் திட்டங்கள் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கிறது. அங்கு அவர்கள் நல்ல வட்டியும், பாதுகாப்பு உத்தரவாதமும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தபால் நிலையத்தில் பல சிறப்புத் திட்டங்கள் உள்ளன, அவற்றில் சில…  

குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பல்வேறுத் திட்டங்கள்: குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு என சிறப்பு தனித்தனி திட்டங்கள் இருப்பது தபால் அலுவலகத்தின் சிறப்பு ஆகும். இந்த திட்டங்களில் சில பிரிவில் போடப்படும் பணத்திற்கு 80 சி இன் கீழ் வரி விலக்கும் கிடைப்பது இந்த திட்டங்களின் முக்கியமான அம்சம் ஆகும்.

Also Read | சிறிய முதலீட்டில் பெரிய லாபம் காண வேண்டுமா? இதுதான் அதற்கான வழி

தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate): இந்த அஞ்சல முதலீட்டு திட்டம் மிகவும் பிரபலமானது. அஞ்சலக தேசிய சேமிப்பு சான்றிதழில் (National Saving Certificate) முதலீடு செய்தால் ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி கிடைக்கிறது. வருடாந்திர அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையது. இந்த திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

நிலையான வைப்புத்தொகை (Post Office Fixed Deposit): தபால் அலுவலகம் நிலையான வைப்புத்தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தபால் அலுவலக வைப்புக் கணக்கில் முதலீடு செய்யலாம். இந்த வைப்புக்கணக்கை ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் என நான்கு விதமாக திறக்கலாம். இந்தத் திட்டத்தில், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு பெறலாம்.

என்.பி.எஸ் (NPS): தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஓய்வூதிய திட்டம். இதற்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும். 6 வெவ்வேறு நிதிகளில் முதலீடு செய்யும் வசதியைக் கொண்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நேரத்தில் பணியாளர் மொத்தமாக கணிசமானத் தொகையைப் பெறலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana): பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க சுகன்யா சம்ரிதி யோஜனா சிறந்த வழி. இந்த திட்டத்தில், நீங்கள் 7.6 சதவிகித வட்டி கிடைக்கிறது. 1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.  

Also Read | LIC Warning: இதை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஜாக்கிரதை

கிசான் விகாஸ் பத் (Kisan Vikas Patra): சிறிய அளவிலான முதலீட்டிற்கு இது ஒரு நல்ல வழி. இந்த சேமிப்பு திட்டத்தில் 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. இதில் வருமானம் சிறப்பாக இருக்கும், ஆனால் வரி விலக்கு கிடையாது.  முன்பு 113 மாதங்களில் முதிர்ச்சியடைந்த கிசான் விகாஸ் பத்திரம் தற்போது 124 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ராவில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Savings Scheme): மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வசதிகளை வழங்கும் அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்தத் திட்டத்தில் 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இதில், நீங்கள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யலாம் மற்றும் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றன.
 
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund): தபால் நிலையத்தின் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி, 15 ஆண்டுகால நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும், தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத கூட்டு வட்டியை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பிபிஎப்பில் 500 ரூபாய் என்ற சிறிய தொகை முதல் ஆண்டுக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் பிபிஎஃப் முதலீடு மற்றும் அதன் மூலம் ஈட்டப்படும் வட்டி ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

Also Read | ATM Fraud: சென்னை SBI ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடியவர்களில் ஒருவர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News