Vastu Tips: செல்வச்செழிப்புடன் சூப்பரா வாழ சுலபமான வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரத்தின் பின்வரும் சில அடிப்படை வழிகாட்டுதல்களை பின்பற்றி, மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம், நிதி நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை திறம்பட அதிகரிக்க முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2021, 07:11 PM IST
  • குபேரர் செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக கருதப்படுகிறார்.
  • உங்கள் பணப்பெட்டி அல்லது பணப் பையின் முன்பக்கம், தெற்கு அல்லது மேற்கு திசையை பார்த்தவாறு இருந்தால், செலவுகள் அதிகரிக்கும்.
  • வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டி இருக்கக்கூடாது
Vastu Tips: செல்வச்செழிப்புடன் சூப்பரா வாழ சுலபமான வாஸ்து குறிப்புகள் title=

பணம் நமது வாழ்க்கையின் மிக முக்கிய அம்சமாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நிதி நிலையை சீராக்க, வீட்டின் வாஸ்து, அளவீடுகளில் பொருந்தும் வகையிலும், உலகளாவிய ஆற்றலுடனும் ஒத்துப்போகும் விதத்திலும் இருக்க வேண்டும். 

பணம் நம் வாழ்வில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நெருப்பு, நீர், பூமி, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய 5 கூறுகள் பிரபஞ்ச சக்திகளின் கலவையாகும். இவற்றில் ஏதாவது ஒரு கூறின் சமன்பாடு சரியில்லாமல் போனாலும், அது, வீட்டில் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். 

வாஸ்து சாஸ்திரத்தின் பின்வரும் சில அடிப்படை வழிகாட்டுதல்களை பின்பற்றி, மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம், நிதி நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை திறம்பட அதிகரிக்க முடியும். வீட்டில் நிதி செழிப்பு மற்றும் பண வரவைக் கொண்டுவர, சில முக்கியமான வாஸ்து குறிப்புகள் (Vastu Tips) இதோ.

வீட்டில் பணம், செழிப்பு மற்றும் நிலையான நிதி வரவு இருக்க முக்கியமான 8 வாஸ்து குறிப்புகள்:

1. உங்கள் வீட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கில் குபேர யந்திரத்தின் முக்கியத்துவம்

இந்திய புராணங்களின் படி, குபேரர் செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக கருதப்படுகிறார். அவர் புகழ் மற்றும் தங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வடகிழக்கு திசை குபேரனால் நிர்வகிக்கப்படுகிறது, எனவே கழிப்பறை, ஷூ ரேக்குகள் மற்றும் பளுவான தளபாடங்கள், பொருட்கள் போன்ற எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் அனைத்து விஷயங்களும் அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும். உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை குப்பையின்றி வைத்து, நல்ல ஆற்றல் அங்கு வரும்படி அவ்விடத்தை விசாலமாக வைக்க வேண்டும். வீட்டின் வடக்கு பிரிவின் வடக்கு சுவரில் ஒரு கண்ணாடியையோ அல்லது குபேர யந்திரத்தையோ வைப்பது நிதி வாய்ப்புகளை அதிகரிக்கும். 

ALSO READ: வீட்டின் படிக்கட்டுகள், வாழ்க்கையின் படிக்கட்டுகளாகவும் இருக்க சில Tips! 

2. லாக்கர்கள் மற்றும் முக்கிய பணப் பைகள் வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும். 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த வழி, உங்கள் செல்வத்தை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைப்பது ஆகும். உங்கள் நகைகள், பணம் மற்றும் முக்கியமான நிதி ஆவணங்கள் அனைத்தும் தென்மேற்கில் (அத்தகைய பொருட்களை அலமாரியில் அல்லது பாதுகாப்பான் இடத்தில் வைக்கவும்), வடக்கு அல்லது வடகிழக்கு நோக்கி வைக்க வேண்டும். இந்த திசையில் வைக்கப்படும் அனைத்தும் பெருகும்.

உங்கள் பணப்பெட்டி அல்லது பணப் பையின் முன்பக்கம், தெற்கு அல்லது மேற்கு திசையை பார்த்தவாறு இருந்தால், செலவுகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்க்கது. 

3. உங்கள் வீட்டை குப்பைகள் இல்லாமல் வைத்திருக்கவும்

வாஸ்து குறிப்புகளில் இது அடிக்கடி காணப்படும் ஒன்றாகும். உங்கள் வீட்டை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைக்க வேண்டும். உங்கள் வீட்டை எளிமையாகவும், பராமரிக்க எளிதாகவும் வைத்திருங்கள். உங்கள் உறவுகள், உடல்நலம் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதற்கு வீட்டின் வழியாகப் பாயும் ஆற்றல் பொறுப்பாகும். எனவே உங்கள் வீட்டில் தேவையற்ற பொருட்கள், குப்பைக்கூளம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

4. வடகிழக்கில் நீர் ஊற்றுகள் / தொட்டிகள் இருந்தால் சிறப்பு 

வடகிழக்கு பகுதியில் சிறிய நீரால் நிரம்பிய பொருட்கள் அல்லது தொட்டிகளை வைப்பது பணம் மற்றும் நேர்மறை ஆற்றலை மேம்படுத்தும். தண்ணீர் தேங்கி அழுக்காகாமல் இருப்பதை ஒருவர் கவனிக்க வேண்டும். தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வீட்டில் தேங்கி நிற்கும் நீர் நிதி வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும்.

5. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் மாடியில் தண்ணீர் தொட்டி இருக்கக்கூடாது 

வீட்டின் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு மூலையில், குறிப்பாக தண்ணீர் டேங்க் அல்லது தொட்டி போன்றவை இருந்தால், அது, வாழ்க்கைச்சுமை, தலைவலி, மார்பு வலி போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும்.

6. வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒருபோதும் கழிப்பறை வேண்டாம்
வாஸ்து சாஸ்திர (Vastu Shastra) விதிமுறைகளின்படி கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் அவற்றிற்கான இடங்களில் அமைக்கப்படாவிட்டால், அது நிதி இழப்புகள் மற்றும் பண பற்றாக்குறைக்கு மட்டுமல்லாமல், உடல்நலக்குறைவு மற்றும் தூக்கமின்மைக்கும் வழிவகுக்கும். கழிவறைகள் மற்றும் குளியலறைகள் முடிந்தவரை தனித்தனியாக கட்டப்பட வேண்டும். மேலும் வீட்டின் வடமேற்கு அல்லது வடகிழக்குப் பகுதியில் இவை அமைக்கப்பட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால், தென்மேற்கு அல்லது தென்கிழக்கில்  கழிப்பறையை அமைக்கலாம். இருப்பினும், வீட்டின் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு மூலைகளில் இதை அமைக்க வேண்டாம்.

ALSO READ: Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News