Side Effects of Highly Processed Food: இன்றைய நவீன உலகில், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொர்ட்கள் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது. குழந்தைகள் மத்தியில் சிப்ஸ், பர்கர்கள், மிட்டாய்கள், சோடா பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை தினமும் சாப்பிடும் பழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கின்றன. இதுபோன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் நினைவில் கொள்ளும் திறன் ஆகியவை குறைவதோடு பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் முடிவுகள் நரம்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அமெரிக்காவில் உள்ள 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 30,239 நபர்களிடம் நடத்தப்பட்டது. சுமார் பதினொரு வருடங்களாக அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் உணவில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எந்த அளவிற்கு உள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் தொடக்கத்தில், இவர்கள் அனைவருக்கும் பக்கவாதம் அல்லது சிந்தனை மற்றும் கற்றல் திறன்களில் சரிவு வரலாறு இல்லை. ஆய்வின் முடிவில், 768 பேருக்கு அறிவாற்றல் குறைபாடு இருந்தது, 1,108 பேருக்கு பக்கவாதம் இருந்தது.
மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை நடத்திய ஆய்வின் மூலம், உலகில் சுமார் 14 சதவீத பெரியவர்களும், 12 சதவீத குழந்தைகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. மது, புகையிலை போன்றவற்றின் மீது இருக்கும் ஈர்ப்பை போல பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் மீதான் ஈர்ப்பும் அதிகமாகிவிட்டது.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுவதால், நினைவாற்றல் பிரச்சனைகளின் ஆபத்து 16 சதவீதம் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், பதப்படுத்தப்படாத உணவை உட்கொள்வதன் மூலம், மூளை பாதிக்கும் ஆபத்தை 12 சதவீதம் குறைந்தது. அதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து எட்டு சதவீதம் அதிகரித்தது. அதைக் குறைப்பதன் மூலம், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து ஒன்பது சதவீதம் குறைந்தது.
மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!
மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் டபிள்யூ. டெய்லர் கிம்பர்லி மக்களின் உணவு பழக்கம் குறித்து கூறுகையில், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை குறைந்த அளவில் உட்கொள்வது மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும்.
மேலும், அதிக உப்பு உட்கொள்வதால் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என தரவுகள் கூறுகின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அதிக உப்பு (சோடியம்) உட்கொள்வதால் இறக்கின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. பதபடுத்தப்பட்ட உணவுகளில், உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் இதனால் அதிகரித்து வருகிறது.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் என்ன?
இயற்கையாகப் பெறப்பட்ட உணவுப் பொருட்கள் பல நிலைகளில் பதப்படுத்தப்பட்டால், அவை பல நாட்கள் கெட்டுபோகாமல் இருக்கும். உதாரணத்திற்கு எண்ணெயில் வறுக்கப்படுவதன் மூலம் உணவு பொருட்களின் இயற்கையான அமைப்பு மாறும்போது, அத்தகைய உணவுப் பொருட்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் சில உணவுகள் கெட்டுபோகாமல் இருக்க, அவற்றில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் பிரிசர்வேடிவ்கள் சேர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக சர்க்கரை, கொழுப்பு, உப்பு மிக அதிகம் இருக்கும் . புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருக்கும்.
மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ