ஆண்களின் பாலியல் உணர்வை பல மடங்காக உயர்த்தும் உணவுகள்..!

ஆடவர், தங்களது பாலியல் வாழ்க்கையில் மேன்மையடைய ஒரு சில பழங்கள் நன்றாகவே உதவுமாம். அவை எந்தெந்த பழங்கள் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 8, 2023, 04:57 PM IST
  • ஆண்களின் பாலியல் உணர்வை அதிகரிக்கும் உணவுகள்.
  • விறைப்பு மற்றும் விந்தனுக்களை அதிகரிக்க உதவுகிறது.
  • இவற்றை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களின் பாலியல் உணர்வை பல மடங்காக உயர்த்தும் உணவுகள்..! title=

இளவயதில் உள்ள ஆண்களாக இருந்தாலும் சரி, கொஞ்சம் வயது முதிர்ந்த ஆடவர் என்றாலும் சரி, ஒரு சில சமயங்களில் அவர்கள் காம நிலையை அடையாமல் போய்விடுவர். இதனால், அவர்களது படுக்கையறை உறவில் விரிசல் ஏற்படும். இவை ஏற்படாமல் தடுக்க, ஒரு சில உணவுகளை நாம் உட்கொள்ளலாம். அவை என்னென்ன உணவு வகைகள் தெரியுமா? 

தர்பூசணி:

தர்பூசணியில் நிட்ரிக் ஆசிட் என்ற ஒரு வகை அமிலத்தன்மை உள்ளது. இது ஆண்களை உச்சநிலையை அடைய உதவும் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் தர்பூசணியில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்ட அம்சங்கள் அதிகமாகவே உள்ளதாம். இது ஆண்களின் பிறப்புறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்பு உண்டாகி காம உணர்ச்சிகளும் அதிகமாகும் என மருத்துவர்கள் நம்மப்படுகிறது. 

கீரை வகைகள்:

தர்பூசணியில் உள்ளது போலவே கீரை வகை உணவுகளிலும் நிட்ரிக் ஆசிட் அதிகமாக உள்ளது. இதுவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதுகுறித்து மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் கட்டாயம் பயன் தரும்

தக்காளி:

சிகப்பு வகை காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுவாகவே ஆண்களுக்கு அவர்களின் இல்லற பிரச்சனையை சரி செய்ய உதவுமாம். தக்காளி, தர்பூசணி போன்ற பழங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் ஆண்மையும் அதிகரிக்கும் என சில ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமன்றி இவற்றை சாப்பிடுவதால் இருதய நோய், சர்க்கரை நோய் ஆகியவையும் வராமல் தடுக்க முடியுமாம். 

மிளகு:

மகத்துவமான மருந்துகளுள் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது மிளகு. சளி இருமலை மட்டுமல்ல ஆண்களுக்கு ஏற்படும் படுக்கை அறை பிரச்சனைகளையும் மிளகு நிவர்த்தி செய்யுமாம். மிளகில் காரமான அம்சங்கள் நிறையவே உள்ளன. இதுவாகவே காரமாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். இதனால் ஆண்களுக்கும் ஆண்மை பெருகும் என ஒரு சில ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டுமா

நட்ஸ் வகைகள்:

ஓரிரண்டு நட்ஸ் வகைகள் மட்டுமன்றி, ஏராளமான நட்ஸ்களை உட்கொள்வது ஆண்களுக்கு மிகவும் நல்லதாம். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்குமாம்.

மாதுளை:

மாதுளம் பழம், ஆன்டி ஆக்சிடஸ் நிறைந்த பழங்களுள் ஒன்று. இது, ரத்த ஓட்டத்தை சீராக்கும், முகத்திற்கும் பொலிவு தரும். அட அத விடுங்க, ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கவும் இந்த பழம் உதவுமாம். ஆண்களுக்கு இந்த பழம், டெஸ்டோஸ்ட்ரன் அளவை அதிகரிக்கவும் அவர்களின் விந்தனுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுமாம். அதுமட்டுமல்ல, பாலியல் வாழ்க்கைக்கு தேவையான மனநிலையையும் இந்த பழம் மேம்படுத்தும் என கூறப்படுகிறது. 

ஆடவர், தங்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் தினமும் ஒரு தம்ளர் மாதுளை பழ ரசத்தை ருசிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற்னார். ஆண்களின் பாலியல் தூண்டுதலுக்கு காரணமாக உள்ள ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உள்ளது. விறைப்பு தன்மை பெறிவதற்கும் உச்ச நிலை அடைவதற்கும் இந்த ஹார்மோன்தான் காரணம். இந்த ஹார்மோனை மேம்படுத்த தினமும் மாதுசைச்சாற்றை 2 வாரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இதனால், இல்லற வாழ்க்கை இன்பமடையும் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | கொழுப்பு கரைய.. எடை குறைய... காலையில் இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News