Astro: செல்வத்தையும் புகழையும் கொடுக்கும் கஜகேசரி யோகம்

ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்த 12 கட்டங்களிலும் உள்ள எந்த ஒரு ராசிக்கும் 1, 4, 7, 10ம் கட்டங்கள் அல்லது வீடுகள், ஜோதிட சாத்திரத்தில் கேந்திர வீடுகள் எனப்படும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2022, 03:58 PM IST
  • கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம்.
  • எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
  • எதையும் கண்டு அஞ்சாத உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர்.
Astro: செல்வத்தையும் புகழையும் கொடுக்கும் கஜகேசரி யோகம் title=

ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்த 12 கட்டங்களிலும் உள்ள எந்த ஒரு ராசிக்கும் 1, 4, 7, 10ம் கட்டங்கள் அல்லது வீடுகள், ஜோதிட சாத்திரத்தில் கேந்திர வீடுகள் எனப்படும். 

ஒருவரது ஜாதகத்தில் இந்தக் கேந்திர வீடுகளில் குருவும், சந்திரனும் இருந்தால் அவருக்கு கஜகேசரி யோகம் இருப்பதாகப் பொருள். மேலும் சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளிலும் கஜ கேசரி யோகம் அமைகிறது.

கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி யோகம் இருந்தால், யானையைப் போல பலசாலிகளாகவும் சிங்கத்தைப் போன்ற  எதையும் கண்டு அஞ்சாத  உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. 

கஜகேசரி யோகம்  சிறந்த முறையில் அமைந்து விட்டால்,  அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது.  ஏனென்றால், இந்த யோகத்தினால்  விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. 

மேலும் படிக்க | குருவின் அருளால் ஒரு வருடத்திற்கு செல்வ செழிப்பில் மிதக்க போகும் 3 ராசிகள்

கஜகேசரி யோக காலத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் தன் தனிப்பட்ட திறனால் தீர்த்துக் கொள்வார்கள். அதோடு, வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் உண்டாகும்.

ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி ஆகிய கால கட்டங்களில் பிரச்சனைகள் ஏற்படும் என கூறப்படும் நிலையில், அந்த காலகட்டத்தில், கஜகேசரி யோகம் அமைந்தவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மே 26ஆம் தேதி ஏகாதசி தினத்தன்று வியாழன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 முக்கிய கிரகங்கள் மீன ராசியில் இணைய இருக்கும் நிலையில், இந்த மூன்று கிரகங்களும் சேர்ந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது, இது ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

இந்த யோகம் மீனத்தில் உருவாகி இருப்பதாலும், மீன ராசிக்கு அதிபதியான வியாழன்கிரகம் மிகவும் சுப கிரகமாக கருதப்படுவதாலும், இந்த கஜகேசரி யோகத்தின் சுப பலன்கள் மேலும் அதிகரிக்கும். இது தவிர, இந்த நாளில் ரேவதி நட்சத்திரமும் உள்ளது. எனவே, இந்த நாளில் விஷ்ணு பகவானையும் அன்னை லட்சுமியையும் சேர்ந்து வழிபட ப்லன்கள் பன்மடங்காகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்குன் பெறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கையால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News