இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சஷ்டி விரத, பவுர்ணமி விரதம், திங்கட்கிழமை, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு.
உத்தமமான இந்த விரத்தை கடைபிடிக்கையில், உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். அதோடு, இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் பெறுவதோடு, அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் விஷ்ணு அருள்புரிவார்.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனித மனம் தூய்மை ஆடைகிறது, மனதில் உள்ள வெறுப்பு, கோபம், குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடைகின்றன. நாம் செய்த பாவங்கள் விலகி, வாழ்க்கையில் ஏற்றத்தை காணலாம். மனதிற்கு இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.
ஏகாதசி விரம் இருக்கும் நாளில், கேளிக்கை அல்லது விருந்து போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகளுடன் கூடவே, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனினும், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்த பழங்களை சாப்பிடலாம். அவ்வப்போது தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்கலாம்.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்
விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. காலி வயிற்றில் தண்ணீர் குடுக்கும் போது அது வயிற்றையும் சுத்தமாக்குகிறது.
விரதத்தின் போது பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து கடவுள் சிந்தனையுடன் இருக்க வேண்டும். மகா விஷ்ணு குறித்த ஸ்தோத்திரங்களை கூறுவதும், பாடல்கள் இசைபப்தும் மனதிற்கு பெரும் நிம்மதியைத் தரும்.
ஏகாதசி விரத்தின் மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவு அருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவது மிகவும் சிறப்பு.
மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR