தங்க நகைகள் வாங்க போறீங்களா? வந்தது புதிய விதிகள்! ஜாக்கிரதை!

இந்த புதிய நிதியாண்டில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளம் (ஹெச்யூஐடி) இல்லாமல் எந்த நகைக்கடைக்காரரும் தங்க நகைகளை விற்க முடியாது என்று அரசு புதிய விதியை விதித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 4, 2023, 07:13 AM IST
  • ஏப்ரல் 1, 2023 முதல் தங்க நகைகளில் 6 இலக்க ஹெச்யூஐடி இருக்க வேண்டும்.

    6 எண் ஹால்மார்க் மட்டுமே செல்லுபடியாகும் என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஹெச்யூஐடி ஆனது தங்கத்தின் தூய்மை சான்றிதழ் போன்றது ஆகும்.
தங்க நகைகள் வாங்க போறீங்களா? வந்தது புதிய விதிகள்! ஜாக்கிரதை! title=

புதிய நிதியாண்டில் பல துறைகளின் விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்கத்தின் ஹால்மார்க்கிங் விதிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  மத்திய அரசு, தங்க நகை விற்பனை விதிகளை மாற்றியமைத்துள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 1, 2023 முதல், தங்க நகைகளில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (ஹெச்யூஐடி) இருக்க வேண்டும்.  இந்த புதிய நிதியாண்டில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளம் (ஹெச்யூஐடி) இல்லாமல் எந்த நகைக்கடைக்காரரும் தங்க நகைகளை விற்க முடியாது என்று இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) தெரிவித்திருந்தது.  முன்னர் 4 இலக்க மற்றும் 6 இலக்க அடையாளங்கள் பற்றி குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் இப்போது 6 எண் ஹால்மார்க் மட்டுமே செல்லுபடியாகும் என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | லோன் முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது கனவத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

நாட்டில் நிலவி வரும் போலி நகைகளின் விற்பனையை தடுக்கும் விதமாக அரசு இந்த புதிய ஹால்மார்க்கிங் விதிகளை அமல்படுத்த முயற்சித்து செய்து வந்த நிலையில், தற்போது இந்த விதிகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.  நகையின் தூய்மையைக் கண்டறிய அதற்கு 6 இலக்க எண்ணெழுத்து குறியீடு வழங்கப்படுகிறது, இது ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (ஹெச்யூஐடி) எனப்படும்.  இந்த 6 இலக்க எண்ணின் மூலம் இந்த நகை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.  வாடிக்கையாளர்கள் இந்த எண்ணை ஸ்கேன் செய்வதன் மூலம் வாங்கக்கூடிய தங்கம் போலியானதா அல்லது கலப்படமானதா என்பதை கண்டறிய முடியும்.  சுருங்கக்கூறின், இந்த ஹெச்யூஐடி ஆனது தங்கத்தின் தூய்மை சான்றிதழ் போன்றது ஆகும்.  

தங்க நகைகளுக்கான புதிய ஹால்மார்க்கிங் விதிகள் ஏப்ரல் 1, 2023 முதல் கட்டாயமாக்கப்பட்டு விட்டாலும், பழைய நகைகளை விற்கும்போது நீங்கள் கவலைகொள்ள வேண்டிய தேவையில்லை.  மக்கள் பழைய நகைகளை விற்ச் சென்றால் அதற்கு ஹால்மார்க்கிங் தேவையில்லை.  மேலும் பழைய நகைகளை விற்பனை செய்யும் விதியில் அரசு எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News