லோன் முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது கனவத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

லோன் எடுக்கும் பலரில் சரியாக திட்டமிட்டு கடனை முன்கூட்டியே அடைப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2023, 04:33 PM IST
 லோன் முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது கனவத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..! title=

ஒரு நபருக்கு தனது பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் தேவைப்படும்போது கடன் பெறுகிறார்கள். உதாரணமாக, எதிர்கால வருமானத்தை அதிகரிக்க அல்லது ஒரு கடனைத் தீர்ப்பதற்காக அல்லது ஒரு சொத்தை வாங்க கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கும் கடனுக்கு நீங்கள் வட்டியும் சேர்த்து செலுத்துவீர்கள். ஒருவேளை வட்டி மற்றும் அசலை செலுத்துவதற்கு உங்களிடம் போதுமான தொகை இருக்கும்பட்சத்தில் விரைவில் செலுத்துவது மட்டுமே சிறந்த முடிவாக இருக்கும். அதேநேரத்தில், எதிர்கால அசௌகரியங்களைத் தவிர்க்கவும், நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கவும், உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

கட்டணம் மற்றும் என்ஓசி

கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால், நீங்கள் வங்கிக்குத் தெரிவித்து, நிலுவைத் தொகையில் 1 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை ஏதேனும் முன்கூட்டியே கட்டணம் இருந்தால் விசாரிக்க வேண்டும். அனைத்து அசல் ஆவணங்களும் சரியான இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் வங்கி அலுவலகம் அல்லது கிளைக்குச் சென்று, அனைத்து நிலுவைத் தொகையும் செலுத்தப்பட்டதாகக் கூறி NOC (ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்) பெற வேண்டும்.

CIBIL ஸ்கோர் புதுப்பித்தல்

வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை, சொத்து தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளின் விவரங்களும் என்இசி (என்கம்பரன்ஸ் சான்றிதழ்) என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், கண்டிப்பாகப் பெறுங்கள். உங்கள் CIBIL ஸ்கோர் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இது பொதுவாக செயலாக்க நேரம் எடுக்கும். அதேநேரத்தில் ஒருவேளை அலட்சியம் காரணமாக நீங்கள் வாங்காவிட்டால் எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள்.

மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

ஆலோசனை பெறுங்கள்

கடனை முன்கூட்டியே மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் நிதிகளின் மூலத்தைக் கணக்குப் பார்ப்பதற்கு எப்போதும் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும். நிபுணர்கள் கூறுகையில், கடன் வாங்கும் போது மக்கள் கவனமாக இருக்கிறார்கள், ஆனால் அதை மூடும் போது, ​​மக்கள் மிகவும் நிம்மதியாக உணர்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் விஷயங்களை மறந்துவிடுவார்கள்.

கடனை செலுத்துவதில் திட்டமிடல்

கடனை செலுத்தும்போது உங்களிடம் சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். நீண்ட கால கடன் மற்றும் குறுகிய கால கடன் என பிரித்து, அதில் எதற்காக அதிக வட்டி செலுத்துகிறீர்கள் என்பதை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதில் அதிக வட்டி செல்லும் கடனுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் அடைத்துவிடுங்கள். தனி நபர் கடன், வாகன கடன், கிரெடிட் கார்டு கடன் ஆகியவை அதிக வட்டி கொண்ட கடன்கள். 

மேலும் படிக்க | 8th Pay Commission வருகிறதா? 44% ஊதிய உயர்வு விரைவில்? மாஸ் அப்டேட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News