ITR Filing: வருமான வரியைச் சேமிப்பது என்பது பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய சவாலான விசயமாகும். சிலர் டிடிஎஸ் வடிவில் பிடிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், வருமான வரி (Income Tax) தாக்கல் செய்ய பொது மக்கள் ஒரு சார்டர்ட் அகவுண்டண்ட்டின் (CA) உதவியை நாட வேண்டியுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதில் தேவையான பணிகளை செய்ய இந்த நபர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த பிரச்சனைகளை சரி செய்ய, வீட்டில் இருந்த படி, வருமான வரி தாக்கல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதன் மூலம் நீங்களும் ஆன்லைனில் வருமான வரி கணக்கை (ITR) 5 நிமிடங்களில் தாக்கல் செய்ய முடியும். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன், சில முக்கிய ஆவணங்களை நீங்கள் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் தேவைப்படும்
ஐடிஆர் தாக்கல் செய்ய உங்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படும். பான் அட்டை ( PAN), ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், முதலீட்டு விவரங்கள் மற்றும் அதன் ஆதாரம் / சான்றிதழ், படிவம் 16, படிவம் 26AS போன்ற தேவையான ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் ITR தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த ஆவணங்களில் இருந்து மட்டுமே கிடைக்கும்.
வரி செலுத்தும் வகைகளில் நீங்கள் எந்த வகை வரி செலுத்துபவர்?
ஐடிஆர் தாக்கல் செய்ய, நீங்கள் எந்த வகை வரி செலுத்துபவர் என்பதையும், எந்த ஐடிஆர் படிவத்தை நிரப்ப வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஐடிஆர் 1 'சஹஜ்' படிவம் (Sahaj Form), மொத்த வருமானம் ரூ. 50 லட்சம் வரை உள்ள வரி செலுத்துபவர்களுக்கானது. இவர்கள் சம்பளம், வீடு, வட்டி போன்ற பிற மூலங்களிலிருந்து வருமானம் பெறுபவர்கள்.
ALSO READ | December 31-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால், வீண் பண விரயம்
ஆன்லைனில் ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான படிப்படியான செயல்முறையை இங்கே காணலாம்:
- இதற்கு முதலில் incometax.gov.in என்ற இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்.
- இப்போது ‘Login’ பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பயனர்பெயரை உள்ளிட்டு 'continue' என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இதன் பின்னர், e-file டேப்பில் கிளிக் செய்து, File Income Tax Return ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- 2021-22 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து, ‘continue’ ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் 'ஆன்லைன்' அல்லது 'ஆஃப்லைன்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
- ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘continue' என்ற டேபைக் கிளிக் செய்யவும்.
- இனி, ‘பர்சனல்’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது 'continue' என்ற டேபைக் கிளிக் செய்யவும்.
- ITR-1 அல்லது ITR-4 ஐத் தேர்ந்தெடுத்து, 'continue' என்ற டேபைக் கிளிக் செய்யவும்.
- விலக்கு வரம்புக்கு மேல் அல்லது, பிரிவு 139(1) இன் கீழ், 7வது விதியின் கீழ் ரிடர்ணுக்கான காரணம் கேட்கப்படும்.
- ஐடிஆர் ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடவும்.
- இப்போது ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்ய புதிய பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.
- உங்கள் ஐடிஆரைச் சரிபார்த்து, வருமான வரித் துறைக்கு ஒரு பிரதியை அனுப்பவும்.
ALSO READ | ITR Filing: இவர்கள் ITR தாக்கல் செய்ய வேண்டாம், நிபந்தனைகளும் விதிமுறைகளும் இவைதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR