MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது

5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழப்போகிறது, காரணம் தெரிந்தால் துள்ளி குதிப்பீர்கள்...  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 08:46 AM IST
MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது title=

புதுடெல்லி: புத்தாண்டு துவங்க உள்ள நிலையில், கிரக நிலைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் தளபதியாக கூறப்படும் செவ்வாய், நிலம், தைரியம், திருமண வாழ்க்கைக்கு காரணமானவர். 

ஜனவரி 16-ம் தேதி தனது ராசியில் இருந்து வேறொரு ராசிக்கு மாறும் செவ்வாய் பகவான்,  தனுசு ராசியில் இருந்து அருள் பாலிப்பார். இது சிலருக்கு சுணக்கத்தைக் கொடுத்தாலும், சிலருக்கு இணக்கத்தை நல்கினாலும், பலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. 

செவ்வாய் கிள்ளிக் கொடுத்தாலே போதும் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்த இந்த 5 ராசிக்காரர்களும் இனி செவ்வாயின் அள்ளிக் கொடுக்கும் தன்மையினால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவார்கள். இது செவ்வாயின் புத்தாண்டு (New Year) போனஸ்...

மேஷ ராசி
மேஷ ராசிக்கு மோசம் இல்லை என்று சொன்னது போய், மேலும் மேலும் உயர்வு ஏற்படவிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மகத்தான பலனைத் தரும். இவர்களுக்கு பதவி, பணம், கௌரவம் எல்லாம் கிடைக்கும். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். மொத்தத்தில், வாழ்க்கையில் அற்புதமான நேரம் தொடங்கிவிட்டது. 

ALSO READ | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட்

மிதுனம்
தனுசு ராசியில் செவ்வாய் நுழைந்தவுடன் மிதுன ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய ஆரம்பிக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுக்கும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம். நல்ல செய்திகள் காதில் தேனாக வய்ந்துப் பாயும் காலம் தொடங்கிவிட்டது. 

சிம்மம்
செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் பலன் தரும். முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் இருக்கும். குறிப்பாக அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் சூழ்நிலையும் உருவாகும். எடுக்கும் எல்லாச் செயல்களிலும் வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி
ஜனவரி 16க்குப் பிறகு பெரும் பண ஆதாயங்களைப் பெறும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள் தான்... பொருளாதார நிலை பெருமளவில் உயரும்.  எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும்.  

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சரிப்பதால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பெரிய வெற்றி தேடிவந்து சேரும். நல்ல வேலை வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்கும் நேரம் இது என்றும் கூறலாம்.

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News