Hansika: ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ ஹன்சிகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?

கோலிவுட் திரையுலிகின் முன்னணி நடிகை ஹன்சிகா, சில வருடங்களுக்கு முன்னர் தனது உடல் எடையை குறைத்துக்கொண்டார். அதை அவர் எப்படி செய்தார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 12, 2023, 06:21 PM IST
  • சமீபத்தில் திருமணம் முடித்த நடிகை ஹன்சிகா.
  • ஹன்சிகா காலையில் எழுந்ததும் கிரீன் டீ குடிப்பாராம்.
  • ஹன்சிகாவிற்கு வீட்டு உணவுகள் மிகவும் பிடிக்குமாம்.
Hansika: ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ ஹன்சிகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா? title=

தமிழில் ‘ப்பளிமாஸ்’ நடிகை என ரசிகர்கள் பலரால் கொஞ்சப்பட்டவர் ஹன்சிகா. சில காலத்திற்கு இவரை தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் குட்டு குஷ்பு என்று கூட அழைத்து வந்தனர். இந்த நிலையில், ஹன்சிகா சில வருடங்களுக்கு முன்னர் நன்றாக உடல் எடையை குறைத்துவிட்டார்.

உடல் எடையை குறைத்த ஹன்சிகா:

ஹன்சிகா தனது ஆரம்ப கால தமிழ் சினிமா வாழ்க்கையின் போதே தனுஷ்-ஜெயம் ரவி என இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். 90’ஸ் குழந்தைகளிடையே பிரபலமான ஷக்கலக்க பூம் பூம் மேஜிக் பென்சில் தொடரில் குழந்தை நட்சத்திரமாகத்தான் தனது திரைபயணத்தை ஆரம்பித்தார் ஹன்சிகா. அதன் பிறகு, கோலிவுட் படங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இப்போது ஹீரோயினை மட்டும வைத்து எடுக்கப்படும் கதைகள் சிறப்பாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஹன்சிகா. 2011-2016ஆம் ஆண்டு வரை கொழுக் மொழுக் பப்ளி மாஸாக வலம் வந்த இவர், அதன் பிறகு நன்றாக உடல் எடையை குறைத்து விட்டார். அதன்பிறகு, ஒரு நேர்காணலில் தனது ஃபிட்னஸ் டயட் குறித்த ரகசியத்தை உடைத்தெறிந்தார் ஹன்சிகா.

ஹன்சிகாவின் டயட்:

ஹன்சிகா பெரிதாக வெளி உணவுகளை விரும்பி சாப்பிடுபவர் இல்லையாம். இவருக்கு வீட்டில் செய்த ராஜ்மா சாவல் என்றால் ரொம்பவே விருப்பமாம். அதுமட்டுமன்றி, அதிக சீஸ் போட்ட உணவுகளையும் ஹன்சிகா தொடுவதே இல்லையாம். 

மேலும் படிக்க | இஸ்லாமியர்களை தாக்கி எடுக்கப்பட்டதா ஃபர்ஹானா?

ஜிம்மிற்கு செல்வது:

காலையில் எழுந்தவுடன் ஜிம்மிற்கு செல்வது ஹன்சிகாவின் வழக்கம். அதை தவறாமல் கடை பிடிக்கும் அவர், ஜிம்மிற்கு ஜாக்கிங்கிலேயே செல்வாராம். அது மட்டுமன்றி கிடைக்கும் சமயங்களில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது யோகா பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றையும் செய்வாராம் ஹன்சிகா. 

காலையில் எழுந்தவுடன்..

காலையில் நாம் சாப்பிடும் உணவு நம் நாளின் முதல் உணவு என்பதால் அது மிகவும் ஹெல்தியானதாக இருக்க வேண்டும் என நம்புபவர் ஹன்சிகா. அவர், எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பாராம். அதன் பிறகு சர்க்கரை அற்ற க்ரீன் டீயை பருகுவாராம். ஜிம்மிற்கு செல்வதற்கு முன்பு பப்பாளி பழம் சாப்பிடுவாராம். இத தவிர, ஹன்சிகா தனது டயட்டில் காலையில் ஆடை நீக்கிய பாலை குடிப்பது அதனுடன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதையும் வழக்கமாக்கியுள்ளார். அவரது உடற்பயிற்சியாளர் கூறுவதற்கு ஏற்றவாறு தனது டயட்டை மாற்றுவாராம் ஹன்சிகா. 

மதிய உணவு:

காலையில் ஸ்ட்ரிக்டான உணவு டயட்டை கடைபிடிக்கும் ஹன்சிகா, மதிய வேளை உணவிற்கும் அப்படியே கடைபிடிக்கிறார். இவரது மதிய உணவு டயட்டில் வேகவைத்த காய்கறிகளை தவிர எதுவுமே இருக்காதாம். டின்னருக்கும் அதே போல கம்மி அளவிளான ஆரோக்கிய உணவுகளையே உட்கொள்கிறார் ஹன்சிகா.

ஹன்சிகாவின் திருமண டயட்:

சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்த ஹன்சிகா, அதற்காகவும் ஸ்பெஷலாக டயட் இருந்தார். அதற்காக அவர், துரித உணவுகளை முற்றிலும் தவிர்த்தாராம். அது மட்டுமன்றி, தனது ஆரோக்கிய உணவினை 7 வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டாராம். தனது சரும அழகிற்காக பழசாறு குடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் ஹன்ஸ். 

மேலும் படிக்க | Bigg Boss Julie: “ஜூலிக்கு கல்யாணமா?” மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News