Bigg Boss Julie: “ஜூலிக்கு கல்யாணமா?” மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜூலி, மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 12, 2023, 04:31 PM IST
  • பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஜூலி.
  • இப்போது சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
  • சில படங்களிலும் துணை கதாப்பாத்திரங்கலில் நடித்துள்ளார்.
Bigg Boss Julie: “ஜூலிக்கு கல்யாணமா?” மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்! title=

ஜல்லிக்கட்டு பாேராட்டத்தில் பங்கேற்று பிரபலமாகி தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி வரை வந்தவர் ஜூலி. 

பிக்பாஸ் ஜூலி

பல லட்சம் தமிழர்கள் ஒன்றிணைந்து மெரினாவில் பாேராடிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர மங்கை என பெயரெடுத்தார் ஜூலி. பிக் பாஸிற்கு வந்தவுடன் அந்த பெயர் அப்படியே ரிப்பேர் ஆனது. அதன் பிறகு, சில நாட்கள் அமைதியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாக படம் மற்றும் சின்னத்திரையில் தோன்றி வருகிறார். விமலுடன் மன்னர் வகையரா, ஹிப் ஹாப் தமிழாவுடன் நான் சிரித்தால் உள்ளிட்ட  படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் வந்தார். அதன் பிறகு, அம்மன் தாயி என்ற படம் மூலம் ஹீரோயினாகவே எண்ட்ரி கொடுத்து விட்டார். இவர், சின்னத்திரை நடிகர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் பாேட்டோ வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு

சீரியலில் எண்ட்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு சில பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்தன. அதன் மூலம் தனக்கு கிடைத்த நெகடிவ் பெயர்களை திருத்திக்கொள்ள முடியாது என்றாலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலிக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதனால்தான் இவருக்கு சின்னத்திரையில் முகம்காட்டும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 

சீரியல் நடிகருடன் திருமணம்? 

தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வியில் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், ஜூலிக்கு கதாநாயகனை ஒரு தலையாக காதலிக்கும் “படையப்பா நீலாம்பரி” போன்ற வில்லி ரோலில் நடித்து வருகிறார். அந்த தொடரில், இத்தனை நாட்களாக கதாநாயகனான வெற்றியை காதலித்து வந்த அவர் திடீரென வெற்றியின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதை படமாக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர் சர்ச்சையில் ஜூலி

அ.தி.மு.கவினருக்கு எதிரான வாசகங்களையும், அப்போதைய முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வத்திற்கு எதிரான வாசங்கள் பொருந்திய பதாகைகளையும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காண்பித்து அரசியல் கட்சிகளின் காேபத்திற்கு ஆளானார். இவர், பிக்பாஸ் மூலம் பிரபலமாவதற்கு முன்பு செவிலியராக இருந்தார். இதையடுத்து, நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா குறித்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில அரசியல் காரணங்களினால் இந்த படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, காதல் பிரச்சனையில் வேறு இடையிடையே சிக்கனார். இப்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்ததை அடுத்து தொடர்ந்து ஊடகத்தின் கண்களிலேயே பட்டுக்கொண்டிருந்தார் ஜூலி. சில நாட்கள் அவர் அமைதியாக இருந்த நிலையில், இப்போதுதான் சின்னத்திரையில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறார். 

மேலும் படிக்க | மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு பச்சை குத்தியது யாரை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News