மீம்ஸ் மூலம் காதலை வளர்க்கும் 2K காதலர்கள்... 90s கிட்ஸ்க்கு டேட்டிங் டிப்ஸ்கள் இதோ!

Dating Tips: GenZ மற்றும் Millennial தலைமுறை காதலர்களின் அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளைப் படிக்கும் ஒரு கணக்கெடுப்பை டேட்டிங் செயலியான QuackQuack,சமீபத்தில் நடத்தியது. அதுகுறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 7, 2023, 10:19 PM IST
  • மீம்ஸ்கள், க்யூட் வீடியோக்களை டேட்டிங் செய்பவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
  • இது அவர்களின் உறவை வலுவாக்குவதில் முக்கிய காரணியாக உள்ளது.
  • திரைப்படங்கள், வெப்-சிரீஸ்களும் டேட்டர்களிடம் அதிக செல்வாக்கை பெற்றுள்ளது.
மீம்ஸ் மூலம் காதலை வளர்க்கும் 2K காதலர்கள்... 90s கிட்ஸ்க்கு டேட்டிங் டிப்ஸ்கள் இதோ! title=

Dating Tips: டேட்டிங்கில் பல புதுமையான மற்றும் பல பலனளிக்கக் கூடிய விஷயங்களை மேற்கொண்டு தற்போதைய இளம் தலைமுறையினர் தங்கள் காதல் வாழ்க்கையில் பல்வேறு கதவுகளை திறக்கின்றனர் எனலாம். பலரும் மீம்ஸ் அனுப்புவது முதல் தங்களுக்குப் பிடித்த பாடல்களை பகிர்வது வரை, தங்களின் காதல் இணையர்களுடன் ஒன்றிணைவதற்கு உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

GenZ மற்றும் Millennial தலைமுறை காதலர்களின் அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளைப் படிக்கும் ஒரு கணக்கெடுப்பை டேட்டிங் செயலியான QuackQuack,சமீபத்தில் நடத்தியது.

QuackQuack நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவி மிட்டல் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "எங்கள் செயலியில் மாதத்திற்கு 35+ மில்லியனுக்கும் அதிகமான சேட்கள் பரிமாறப்படுகின்றன, மேலும் புதிய மேட்ச்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அதே உணர்வுகளை வெளிப்படுத்தும் க்யூட் வீடியோக்களை அடிக்கடி அனுப்புகின்றனர். மேலும் அவர்கள் மீம்ஸ், சமூக ஊடகங்களில் திரைப்படங்கள் மற்றும் தற்போதைய போக்குகளைப் பற்றி விவாதிப்பதைக் கூட நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.

புதிய காதல் மொழிகள்

GenZ காதலர்களில், 21 சதவீதம் பேர் மீம்ஸ் மற்றும் வேடிக்கையான வீடியோக்களை அனுப்புவது புதிய மேட்ச்களிடம் சிறந்த உறவை உருவாக்குவதாக கணக்கெடுப்பின்போது குறிப்பிட்டுள்ளனர். இனி, "ஏய், எப்படி இருக்கிறாய்?" என உங்கள் ஆர்வமுள்ள நபர் தொடர்ந்து உங்களுக்கு மீம்ஸ்களை அனுப்பினால், அவர்கள் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் என்று மட்டுமே அர்த்தம், மேலும் அவர்கள் அனுப்பும் உள்ளடக்கம் சிரிப்பதற்காக மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். அவர்கள் ஆர்வமாக இருப்பதற்கான நேரடி அறிகுறியாக இருக்கலாம். 

மேலும் படிக்க | மனைவியுடன் சண்டை வராமல் இருக்க... இந்த நான்கு விஷயங்கள் அவசியம்!

ஒருவருக்கொருவர் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்

கணக்கெடுப்பின் போது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 37 சதவீதம் பேர், ஒருவரையொருவர் அறிந்துகொள்வது என்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் வித்தியாசமாக இருப்பதாக வெளிப்படுத்தினர். உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த நிறத்தைப் பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள். உங்களின் முந்தைய காதல் தோல்வியில் இருந்து நீங்கள் எவ்வளவு நன்றாக குணமாகிவிட்டீர்கள், பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது எப்படி அதை கடந்து செல்கிறீர்கள் என்பது தான் தற்காலத்தில் கேட்கப்படும் கேள்வியாகும். மேலும் ஒருவரின் விருப்பமான நிறத்தைக் காட்டிலும் தெரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ள கேள்விகள் அதிகமுள்ளது என்கின்றனர்.

இசையால் இதயத்தை இழுக்கிறது

இரண்டு நபர்களுக்கு இசையில் ஒரே மாதிரியான ரசனைகள் இருந்தால், அது அவர்கள் ஜோடி சேர்வதற்கு போதுமான காரணம் என்று மேலடுக்கு நகரங்களில் இருந்து வந்தவர்களில் 19 சதவீதம் பேர் கூறுகிறார்கள். உங்களுக்கு ஒரே மாதிரியான விருப்பங்கள் இருக்கும்போது பேசுவதற்கு நிறைய இருக்கிறது, இது மேட்ச்களுக்கு இடையே உரையாடல்களை எளிதாக்குகிறது. இந்த டேட்டர்களில், 11 சதவீதம் பேர் OTT இயங்குதளங்களுக்கான பாஸ்வேர்டை பகிர்வதும் இணைப்பதற்கான ஒரு வழியாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் சிறிது காலம் பேசிக் கொண்டிருக்கும் ஒருவரை நீங்கள் ஈர்க்க விரும்பினால், நீங்கள் சந்தா பெற்ற OTT இயங்குதளத்தில் உங்கள் கடவுச்சொல்லை அவர்களுக்கு வழங்கவும், மேலும் நீங்கள் எவ்வளவு விரைவாக நண்பர்களாகி விடுகிறீர்கள் என்பதைப் பார்க்கவும்.

திரைப்படம், தொடர் மற்றும் பல...

OTT இயங்குதளங்களைப் பற்றி பேசுவது, அதே தொடரை யாரோ ஒருவர் விரும்புவது, அல்லது இன்னும் சிறப்பாக, அதே தொடரை வெறுப்பது, இணைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 22 முதல் 28 வயதுக்குட்பட்ட ஆண்களில் குறைந்தது 16 சதவீதம் பேர் அவ்வாறு கூறுகிறார்கள். ஒரு தொடரைப் பற்றிய விமர்சனக் குறிப்புகளைப் பகிர்வது, அது எவ்வளவு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது, அல்லது எப்படி அது மிகைப்படுத்தலுக்கு ஏற்ப வாழவில்லை என்பது உரையாடலுக்கான சிறந்த தலைப்புகள் என்கின்றனர். அதே வயதிற்குட்பட்ட பெண் டேட்டர்களில் 14 சதவீதம் பேர், "நீங்கள் அந்த வெப்-சீரிஸ்களை பார்த்தீர்களா?" என்பது உரையாடலை தொடங்குவதற்கு சிறந்த கேள்வியாகும் என்கின்றனர். 

நகைச்சுவைக்கு தான் முதலிடம்

திரைப்படங்களை மறந்துவிடுங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் இந்த நாட்களில் புதிய தம்பதிகள் அதிகம் விரும்பும் இடம் என்று அடுக்கு 1 நகரங்களில் இருந்து 25-30 வயதுடையவர்களில் 24 சதவீதத்திற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். இது உங்களை நன்றாகச் சிரிக்க அனுமதிக்கிறது, மேலும் உங்கள் மேட்ச்களின் நகைச்சுவை உணர்வை நீங்கள் அளவிடலாம் மற்றும் உங்கள் வைப் ஒரே அளவில் செட் ஆகிறதா என்பதைப் பார்க்கவும் முடியும் என்று அவர்கள் விளக்கினர்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் அரேன்ஜ் மேரேஜ்... இளைஞர்களின் இந்த மோகத்திற்கு என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News