ஜாக்பாட் செய்தி: இந்த ரூ.5, ரூ.10 நாணயங்கள் இருந்தா லட்சாதிபதி ஆகலாம்!!

இந்த ரூ.10 மற்றும் ரூ.5 நாணயங்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை விற்று ரூ.10 லட்சம் வரை பணம் ஈட்டலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2021, 04:31 PM IST
ஜாக்பாட் செய்தி: இந்த ரூ.5, ரூ.10 நாணயங்கள் இருந்தா லட்சாதிபதி ஆகலாம்!!   title=

உங்கள் விட்டில் பழைய ரூ.10 மற்றும் ரூ.5 இந்திய நாணயங்கள் இருக்கின்றனவா? இவை அப்படியே பயனில்லாமல் இருப்பதற்கு பதிலாக, இவற்றின் மூலம் ஒரு பெரிய தொகையை பெற முடிந்தால் எப்படி இருக்கும்? அதற்கான ஒரு நல்ல வழியை இந்த பதிவில் காணலாம். 

எனினும், இதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் வழங்கப்பட்ட, உங்களிடம் உள்ள நாணயங்கள் குறிப்பிட்ட அளவுகோல்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை ஆன்லைனில் விற்று ரூ.10 லட்சம் வரை பணம் ஈட்டலாம். பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வதற்கு, இதற்கான இணைதளங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

பல இணையதளங்களில் பழைய நாணயங்கள் (Old Coins) மற்றும் ரூபாய் நோட்டுகள் ஏலம் விடப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாம் இந்த பதிவில் குறிப்பிடும் 10 அல்லது 5 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணோ தேவியின் புகைப்படம் இருக்க வேண்டும். இந்த நாணயங்கள் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இவற்றுக்கு இ-காமர்ஸ் தளங்களில் சமீபகாலமாக அதிக தேவை இருந்து வருகிறது. 

Quickr அல்லது Olx போன்ற தளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வது எப்படி

- நீங்கள் விற்க விரும்பும் நாணயத்தின் தெளிவான புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

- அதை eBay அல்லது OLX இல் பதிவேற்றவும்.

- நிறுவனம் உங்கள் விளம்பரத்தைக் காண்பிக்கும்.

- ஆர்வமுள்ளவர்கள், பழைய நோட்டுகள் (Old Rupee Note) மற்றும் நாணயங்களை வாங்க விரும்புவோர், விளம்பரம் வெளியானதும் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

ALSO READ | Jackpot! இந்த ‘5’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சங்களை அள்ளலாம்..!! 

- நீங்கள் பேரம் பேசி அவருடன் டீல் செய்து கொள்ளலாம். 

இதற்கிடையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டது.

"பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவைப் போலியாகப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து கட்டணங்கள்/ கமிஷன்/வரியை பெற்று சில தனிமங்கள், பல்வேறு ஆன்லைன் / ஆஃப்லைன் தளங்கள் மூலம் மோசடி செய்வதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது" என ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இது போன்ற விஷயங்களில் இந்தியன் வங்கி ஈடுபடுவதில்லை என்றும் இதற்காக எந்த விதமான கட்டணங்கள் / கமிஷன்களையும் கோருவதில்லை என்றும் 
இந்திய ரிசர்வ் வங்கி மேலும் தெளிவுபடுத்தியது. ரிசர்வ் வங்கி எந்த நிறுவனம்/ தனிநபருக்கும் அத்தகைய பரிவர்த்தனைகளில் அதன் சார்பாக கட்டணம் / கமிஷன் வசூலிக்க அனுமதிக்கவில்லை என்றும் மத்திய வங்கி கூறியது.

ALSO READ | இந்த 50 பைசா நாணயம் உங்ககிட்ட இருந்தா, ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News