புது தில்லி: பணம் ஈட்டுவது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாகும். சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள், சிலரோ ஒன்றும் செய்யாமல், வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள்.
நீங்களும் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், இவை உங்களுக்கு பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Old Coins) சேகரிப்பதில் ஆர்வம் காட்டும் பலர் அவற்றை மிகவும் கவனமாக வைத்திருப்பார்கள். இந்த நாணயங்களின் விலை இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. இவற்றை விற்று ஒருவர் கோடீஸ்வரராகக்கூட முடியும் என்பது ஆச்சரியத்தை அளிக்கலம், ஆனால் அது உண்மையே!!
பழங்கால பொருட்களுக்கான நாட்டம் உங்களை லட்சாதிபதி ஆக்கும்
சிறுவயதில் 1, 5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை (Old Note Collection) சேகரித்து உண்டியலில் சேர்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்திருந்தால், இப்போது அந்த நோட்டுகள் உங்களை கோடீஸ்வரனாக்கும். இந்த நோட்டுகள் தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், இவற்றின் மதிப்பு இன்று மிக அதிகமாக உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் பல இணையதளங்களில் ஏலம் விடப்பட்டுகின்றன. இவற்றுக்கு நல்ல தொகையும் கிடைத்து வருகிறது.
1 ரூபாய் நோட்டை இந்த வகையில் விற்கலாம்
- உங்களிடம் இந்த 1 ரூபாய் சிறப்பு நோட்டு இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம்.
- இந்த இணையதளத்தில் இந்த அரிய ரூபாய் நோட்டை வாங்குபவர்கள் பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர்.
- 1 ரூபாய் நோட்டை விற்க, நீங்கள் முதலில் Quikr இல் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
ALSO READ: இந்த ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா, ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்
- அதன் பிறகு, இந்த ரூபாய் நோட்டின் (Rupee Note) புகைப்படத்தை கிளிக் செய்து அதை இங்கே பதிவேற்றவும்.
- அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
- நீங்கள் வழங்கிய தகவலை இணையதளம் சரிபார்க்கும்.
கூடுதல் பணம் சம்பாதிப்பது எப்படி
- இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்த நோட்டு புழக்கத்தில் இல்லை என்றாலும், அதன் மதிப்பு ஆயிரக்கணக்கான ரூபாயாக உள்ளது.
- ரூ.1 நோட்டுகளின் கட்டை பல லட்சம் ரூபாய்க்கு விற்க முடியும்.
- CoinBazzar இணையதளத்தில், ரூ.1 நோட்டு கட்டின் விலை ரூ.49,999 ஆகும். ஆனால், தள்ளுபடிக்குப் பிறகு, இந்த கட்டின் விலை விலை ரூ.44,999 ஆக உள்ளது.
- இதற்கு இணையதளத்தில் உள்ள ஷாப் பகுதிக்குச் சென்று நோட்ஸ் என்பதைக் கிளிக் செய்து ’நோட்ஸ் பண்டில்’-க்கு செல்லவும்.
- இங்கே நீங்கள் அதைப் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள்.
இந்த குறிப்பிட்ட ரூபாய் நோட்டில், 1957ஆம் ஆண்டு ஆளுநர் எச்.எம்.படேலின் கையெழுத்து இருக்க வேண்டும். அதன் வரிசை எண் 123456 ஆக இருக்க வேண்டும்.
ALSO READ: இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR