அஞ்சல் அலுவலகத்தின் பெஸ்ட் திட்டம்: தினமும் ரூ.133 போட்டால்... ரூ. 3 லட்சம் வரை கையில் வரும்!

Post Office Scheme: உங்களின் பட்ஜெட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி அஞ்சல் அலுவலகத்தின் RD திட்டத்தில் தினசரி 133 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், திட்ட முதிர்வின் போது 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2023, 02:04 PM IST
  • இத்திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது.
  • வட்டி விகிதம் 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்தது.
  • அஞ்சல் அலுவலக RD திட்ட கால்குலேட்டரை இங்கு காணலாம்.
அஞ்சல் அலுவலகத்தின் பெஸ்ட் திட்டம்: தினமும் ரூ.133 போட்டால்... ரூ. 3 லட்சம் வரை கையில் வரும்! title=

Post Office Scheme: நாட்டின் நடுத்தர வர்க்கத்தினருக்கு தபால் அலுவலக திட்டங்கள் மிகவும் விருப்பத்திற்குரிய முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களாக உள்ளன. அஞ்சல் அலுவலக திட்டங்களில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களையும் அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. உங்களின் ஒவ்வொரு மாத பட்ஜெட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களுக்கு RD திட்டத்தை வழங்குகிறது, அதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு வட்டி கிடைக்கும். இதில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாயில் இருந்து சேமிக்கலாம். 

அரசு சமீபத்தில் வட்டியை உயர்த்தியது

சமீபத்தில் மத்திய அரசு தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தொடர் வைப்புத்தொகையில் பெறப்பட்ட பணம் முதலீட்டின் தொடக்கத்தில் மாறாது. இதில் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்வதுதான். ஒவ்வொரு மாதமும் RD-ல் டெபாசிட் செய்வதன் மூலம் எவ்வளவு பணம் பெறப்படும் என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | அதிர்ச்சி! இனி ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்!

ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம்...

RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் முதலீடு செய்தால், முதிர்ச்சியின்போது ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 983 கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் முதலீடு செய்தால், ஒரு நாளைக்கு 66 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். இது 5 ஆண்டுகளில் ரூ.1,20,000 ஆகிவிடும். இதன் மூலம் உங்களுக்கு ரூ.21 ஆயிரத்து 983 வட்டி கிடைக்கும். முதிர்ச்சியின் போது நீங்கள் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 983 பெறுவீர்கள்.

ஒவ்வொரு மாதமும் ரூ.4 ஆயிரம்... 

RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.4 ஆயிரம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 968 கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், தினசரி 133 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 48 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். இது 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகிவிடும். இதன் மூலம் உங்களுக்கு ரூ.43 ஆயிரத்து 968 வட்டி கிடைக்கும். முதிர்ச்சியின் போது நீங்கள் ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் 968 பெறுவீர்கள்.

மேலும் படிக்க | டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை செய்யுங்கள்... ஏன் ரொம்ப அவசியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News