பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!!

இரவில் மிகத் தாமதமாக தூங்கி காலையிலும் தாமதமாக விழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 05:04 PM IST
  • முறையான தூக்க பழக்கம் இல்லாதவர்களுக்கு மெலடோனின் என்ற ஹார்மோன் குறைபாடு ஏற்படுகிறது.
  • இளைஞர்கள், இரவு முழுவதும் மொபைல் ஃபோன் மற்றும் கணிணியில் அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
  • இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதில் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!! title=

இரவில் மிகத் தாமதமாக தூங்கி காலையிலும் தாமதமாக விழிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் பதின்ம வயதில் உள்ளவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம்.

பின் தூங்கி பின் எழும் இளைஞர்களுக்கு, தூக்கத்தில் சுரக்கும் ஹர்மோன் ஆன மெலெடோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சுரப்பது பாதிக்கப்படுவதால், பல விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன மெலட்டோனின் இரவு நேரத்தில்தான் சுரக்கின்றன. இதனை எந்த மருந்தின் மூலமும் சுரக்க வைக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!

 பதின்ம வயதில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தாமதமாக தூக்கி, தாமதமாக எழுபவர் என்றால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 ERJ  Open Research இதழ் சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அதிக அளவில் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முறையற்ற தூக்க பழக்கத்தினால்  பல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

கனடாவிலுள்ள ஆல்ப்ரெட்டா பல்கலைக்கழகத்தில் நோய்களுக்கான மருத்துவ பிரிவில் பணியாற்றும் டாக்டர் சுபபிரடா மொய்த்ரா (Dr. Subhabrata Moitra) தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது

இவர் ஸ்பெயினில் உள்ள உலகளாவிய சுகாதாரத்திற்கான பார்சிலோனா கழகத்தில் ( Barcelona Institute for global Health) ஆய்வு நடத்தியபோது இது கண்டறியப்பட்டது

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதில் உள்ளவர்களிடம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான பொதுவான காரணங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு புகைப்பிடிக்கும் பழக்கம் என கூறலாம்.

ஆனால் இது மட்டும் காரணமல்ல என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது தூக்கத்தில் உற்பத்தியாகும் ஹார்மோனான மெலடோனின் அளவிற்கும் இதில் முக்கிய தொடர்பு உள்ளது. ஆஸ்துமா வர வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன் தூங்கி முன் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

ALSO READ | Immunity அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்!!

மேற்கு வங்கத்தில் 13 அல்லது 14 வயதில் உள்ள 1,684  பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு உள்ள மூச்சுத்திணறல், ஆஸ்துமா, மூக்கு ஒழுகுதல் தும்முதல் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது அப்போது அவர்களிடம் இருக்கும் தூங்கும் பழக்கம்  ஆராயப்பட்டது. அவர்கள் குடும்பத்தில் புகைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது,  முன் தூங்கி முன் எழுபவர்களை விட பின் தூங்கி பின் எழுபவர்கள் இடம் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது.

தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன மெலட்டோனின் (Melatonin)  இரவு நேரத்தில்தான் சுரக்கின்றன. இதனை எந்த மருந்தின் மூலம் சுரக்க வைக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மிகவும் நேரம் கழித்து தூங்கி காலையில் தாமதமாக பார்ப்பவர்களிடம்  மெலட்டோனின் ஹார்மோன் மிக குறைவாக காணப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் மொபைல் போன்களிலும் கணினிகளிலும் இரவு முழுவதும் நேரத்தை செலவழித்து மிகவும் நேரம் கழித்து தூங்கி எழும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தங்கள் தூக்கப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Trending News