ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதிகள்!

Indian Railways: உங்களின் IRCTC இணையதளம் அல்லது ஆப் மூலம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2024, 12:11 PM IST
  • டிக்கெட் புக் செய்ய புதிய விதிகள்.
  • பயனர்கள் முழு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.
  • இல்லை என்றால் டிக்கெட் புக் செய்ய முடியாது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதிகள்!  title=

Indian Railways IRCTC Ticket Booking: இந்திய ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி (IRCTC) ஆப் பயன்படுகிறது.  ரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் நீங்கள் கடைசியாக ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு நினைவில் இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள். இந்திய ரயில்வே வெளியிட்ட தரவுகளின்படி, IRCTC 30 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3 கோடி பயனர்கள். அத்தகைய சூழ்நிலையில், IRCTC செய்த மாற்றங்கள் குறித்து பயனர்கள் தெரிந்திருப்பது அவசியம்.

மேலும் படிக்க | WFH: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்!

40 லட்சம் பேர் முறையாக கணக்கை பராமரிக்கவில்லை

கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு ரயில்கள் பழையபடி இயங்கத் தொடங்கியது. அந்த சயமத்தில் ​​ஐஆர்சிடிசி ஆப் மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியது. புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் தங்கள் கணக்குகளில் பயனர் விவரங்களை முறையாக அப்டேட் செய்ய வேண்டும்.  ஆனால் சுமார் 40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்குகளை இன்னும் சரிபார்க்கவில்லை. தங்கள் கணக்கைச் சரிபார்க்காத பயனர்கள் எதிர்காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

IRCTC வழங்கிய விதிகளின்படி, ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாகும். பல மாதங்களாக இணையதளம் அல்லது ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு IRCTC செய்த மாற்றம் பொருந்தும். உங்கள் கணக்கை நீங்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால், சரிபார்ப்பு செயல்முறையை விரைவில் முடிக்கவும். இதைச் செய்த பிறகு, டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. 

ஐஆர்சிடிசியில் தகவல்களை அப்டேட் செய்வது எப்படி? 

IRCTC ஆப் அல்லது இணையதளத்திற்குச் சென்று வெரிஃபிகேஷன் பகுதியை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும். இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, சரிபார் பட்டணை கிளிக் செய்யவும். பிறகு உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணை சரிபார்க்கவும். பிறகு மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட OTP  உள்ளிட்ட பிறகு, உங்கள் அஞ்சல் ஐடியும் சரிபார்க்கப்படும்.  இந்த செயல்முறையை முடித்த பிறகு, நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

குழந்தைகளுக்கு முன்பதிவு?

உங்கள் குழந்தைக்கு வயது 5 முதல் 12 வயது வரை இருந்தால், அவர்களுக்கென தனி பெர்த்தை முன்பதிவு செய்ய விரும்பினால் முழு டிக்கெட் கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், முன்பதிவின் போது உங்கள் 4 வயது குழந்தையின் விவரங்களையும் நீங்கள் உள்ளிட்டால், அந்தக் குழந்தைக்கும் முழு கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவு படிவத்தில் விவரங்களை நீங்கள் நிரப்பவில்லை என்றால், உங்கள் குழந்தையை இலவசமாக கூட்டி செல்ல முடியும்.

மேலும் படிக்க | Indian Railways: இந்திய ரயில்வேயின் புதிய விதி.. RAC டிக்கெட் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News