WFH: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்!

Work From Home Jobs: வீட்டிலிருந்து வேலை செய்ய தேர்ந்தெடுக்கும் நபர்கள், உண்மையில் குறைவான உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2024, 07:42 AM IST
  • WFHல் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது.
  • புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இதனை முதலாளிகள் கவனத்தில் கொள்ள கோரிக்கை.
WFH: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்!  title=

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தி வருகின்றனர்.  சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர சொன்னாலும், பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்துகின்றனர்.  இதனால் கம்பெனிக்கு சில தொகையும் மிச்சம் ஆகிறது.  ஆனால் இதனால் பணியாளர்கள் வேலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தி உள்ளது.  வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்களின் உற்பத்தித்திறன் குறித்த இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  இந்த ஆய்வின் முடிவு சலசலப்பை பெற்று வருகிறது. இந்தியாவில் குறிப்பாக சென்னையில் உள்ள டேட்டா-என்ட்ரி பணியாளர்கள், அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதை விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் 18% குறைவான உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய வரம்பு என்ன? மீறினால் வருமான வரி நோட்டீஸ்

வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் பணியாளர்கள் பற்றிய மற்றொரு ஆச்சரியமான புள்ளி விவரத்தையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் பணியாளர்கள் உண்மையில் 12% வேகமாகவும் துல்லியமாகவும் தங்கள் வேலையில் இருப்பதை அது கண்டறிந்துள்ளது.  இருப்பினும், இந்த ஆய்வில் பணியாளர்கள் அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டில் 27% குறைவான வேலைத்திறனை கொண்டுள்ளனர். அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய விரும்புபவர்கள் மெதுவாக அல்லது குறைவான வேலைகளை செய்தாலும், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் 13% குறைவான உற்பத்தித் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

"உண்மையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது பணியாளர்களின் உற்பத்தித்திறன் அதிகமாக பாதிக்கப்படுகிறது.  மேலும் குறைவான வேலை செய்ய விரும்புபவர்களே WFHஐ தேர்வு செய்கின்றனர்.  வீட்டில் இருந்து வேலை செய்யும் போது ஏன் உற்பத்தி திறன் குறைகிறது என்றால், பணியாளர்கள் வேலை நாளில் வீட்டை சுற்றி இருக்கும் சூழலால் கவனம் சிதறுகிறது மற்றும் இதனால் வேலையும் பாதிக்கிறது" என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.  குழந்தைகளைப் பராமரிக்க, வீட்டு உள்ள சிறு சிறு வேளைகளில் ஈடுபடும் போது, வீட்டில் உள்ள நபர்களிடம் பேசும் போது கவனம் சிதறி உற்பத்தித்திறன் பாதிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

பணியாளர்களின் விருப்பங்களும் சூழ்நிலைகளும் வேலையில் முக்கியம் என்றாலும், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை நிறுவனங்கள் ஆராய்ந்து தங்களின் ஊழியர்களுக்கு உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.  இந்த ஆய்வு ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடத்தப்பட்டாலும், இதுவே பொதுவான கருத்தாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர். "வாரத்தில் பல நாட்கள் வீட்டில் இருந்து பணி புரிந்தாலும், சில நாட்கள் அலுவலகத்திற்குச் செல்வது, பணியாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று ஆய்வு மேலும் கூறுகிறது.  சக ஊழியர்களுடன் நேருக்கு நேர் பேசும் போது, நேரடி பயிற்சி மற்றும் குழு தொடர்புகள் மூலமும் வேலை திறன் வளரும்" என்று ஆய்வாளர் கூறுகிறார்.

மேலும் படிக்க | 3 ஏசி மற்றும் 3 ஏசி எகானமிக்கும் என்ன வித்தியாசம்? கட்டாயம் படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News