இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை தெற்கு மண்டலத்தில் உள்ள பிராந்திய தலைமையகத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ ஆலோசகர் பணிக்கு மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காலிப் பணியிடங்கள்:
Medical Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து MBBS அல்லது அதற்கு சமமான குறைந்தபட்ச தகுதி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
6 மணி நேர வேலைக்கு ரூ.3000 (போக்குவரத்து உள்பட) சம்பளம் வழங்கப்பட உள்ளது. 6 மணி நேரத்திற்கு அப்பால் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கு ரூ.500 கூடுதலாக வழங்கப்படும்.
மேலும் படிக்க | ONGCயில் 871 பணிகள் காலியாக உள்ளன! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/ENG... என்ற இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | அடுத்து உலகம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனை என்ன? பாபா வாங்காவின் கணிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ