Amazon Jobs: 4 ணி நேர வேலை; ₹60,000 சம்பளம்; நீங்க ரெடியா..!!

சில மணிநேரங்கள் மட்டுமே வேலை  செய்து, ஒவ்வொரு மாதமும் 55-60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வகையிலான வேலை வாய்ப்பை அமேசான் கொடுக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2021, 09:54 PM IST
  • அமேசானுடன் வெறும் 4 மணி நேரம் வேலை செய்து 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கவும்
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் அமேசான் காலியிடங்களை அறிவித்துள்ளது
  • 10 முதல் 15 கி.மீ பரப்பளவில் டெலிவரி வேலையை செய்ய வேண்டும்
Amazon Jobs: 4 ணி நேர வேலை; ₹60,000 சம்பளம்; நீங்க ரெடியா..!! title=

Amazon Jobs: புகழ்பெற்ற இ-காமர்ஸ் தளமான அமேசான், வேலை வாய்ப்பு தொடர்பாக அறிவித்துள்ளது. ஆமாம், சில மணிநேரங்கள் மட்டுமே வேலை  செய்து, ஒவ்வொரு மாதமும் 55-60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வகையிலான வேலை வாய்ப்பை அமேசான் கொடுக்கிறது 

டெலிவரி பாய் வேலை

அமேசான் (Amazon) இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது. இதற்கு தேவையான  மிக முக்கியமான விஷயம் பொருட்களின் டெலிவரி நேரத்தைக் குறைப்பதாகும். இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் நிறுவனம் டெலிவரி பாய்க்கான தேவை உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. இந்த பணியில், வாடிக்கையாளர்களின் பேகேஜ்களை கிடங்கிலிருந்து எடுத்து அவர்களது வீட்டிற்கு டெலிவரி வேண்டும். நீங்கள் இந்த வேலையைச் செய்ய விரும்பினால், உங்கள் அருகிலுள்ள அமேசான் வேர்ஹவுஸை தொடர்பு கொள்ளலாம்.

10-15 கி.மீ வரம்பில் சேவை

நிறுவனத்தில், ஒரு டெலிவரி பையன் ஒரு நாளில் 100 முதல் 150 பேக்கேஜ்களை வழங்க வேண்டும். இவை அனைத்தும் வேர்ஹவுஸில் இருந்து 10 அல்லது 15 கிலோமீட்டர் பரப்பளவில் டெலிவரி செய்யப்பட வேண்டும். இந்த வேலையை திட்டமிட்டு செய்தால் 4 முதல் 5 மணி நேரத்தில் எளிதாக முடித்து விடலாம்.  சிறப்பு அம்சம்  என்னவென்றால், பொருட்களின் விநியோகம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பும் நேரத்தை தேர்ந்தெடுத்து  வேலை செய்யலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால்,  https://logistics.amazon.in/applynow. இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். டெலிவரி பாய் பணியில் சேர, நீங்கள் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றால் தேர்ச்சி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும். டெலிவரி செய்ய உங்கள் சொந்த பைக் அல்லது ஸ்கூட்டர் இருக்க வேண்டும். பைக் அல்லது ஸ்கூட்டர் காப்பீடு, ஆர்.சி, ஓட்டுநர் உரிமம்  ஆகியவை விண்ணப்பதாரருக்கு  இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ₹60,000 சம்பாதிக்கலாம்

டெலிவரி பாய் பணியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமான சம்பளம் கிடைக்கும். அமேசானில் டெலிவரி பாய் பணியில் 12 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை நிலையான சம்பளம் கிடைக்கும். பெட்ரோல் செலவு உங்களுடையது. ஆனால் நீங்கள் உங்கள் சம்பளத்தை பேக்கேஜ்களை டெலிவரி செய்வதற்கு ஏற்ப பெற்றுக் கொண்டால், ஒரு பேக்கேஜை வழங்குவதற்கு 10 முதல் 15 ரூபாய் வரை கிடைக்கும். ஒருவர் ஒரு மாதத்தில் சராசரியாக தினமும் 150 பேக்கேஜ்களை வழங்கினால், ஒருவர் எளிதாக ஒரு மாதத்திற்கு 55000 முதல் 60000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது.

Trending News