Old Pension சூப்பர் செய்தி: மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்... முழு வேகத்தில் நடவடிக்கைகள்!!

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் தலைதூக்கும் நிதிச்சுமையை ஈடுசெய்ய புதிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 20, 2023, 11:31 AM IST
  • பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு.
  • வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • ஒவ்வொரு ஆண்டும் நிதியில் தொகை டெபாசிட் செய்யப்படும்.
Old Pension சூப்பர் செய்தி: மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்... முழு வேகத்தில் நடவடிக்கைகள்!! title=

பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியம் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் பல மாதங்களாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக பல போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து பிற மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் போராட்டத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளனர். 

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஜார்கண்ட் அரசாங்கம் ஊழியர்களுக்கு பெரும் பரிசு வழங்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இருப்பினும், நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயத்திற்கு மத்தியில், மாநில அரசு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால், நிதிச்சுமை பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதற்கான புதிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. நிதிச்சுமையை தவிர்க்க, சிறப்பு ஓய்வூதிய நிதியை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன

ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, இத்திட்டத்தை செயல்படுத்தி, சிறப்பு ஓய்வூதிய நிதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.10,000 கோடி டெபாசிட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யப்படும். இதற்காக 2023 ஆம் ஆண்டுக்கு இதில் ரூ.700 கோடி டெபாசிட் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நிதியில் தொகை டெபாசிட் செய்யப்படும்

இதற்காக, மாநில அரசால் பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, ​​அவர்களுக்கு அரசு சிறப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும். புதிய அமைப்பின் கீழ், இப்போது மாநில அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் போன்ற ஒரு சிறப்பு ஓய்வூதிய நிதியை உருவாக்கி அதில் நிதியை டெபாசிட் செய்யும். இதுகுறித்து கூறிய நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரான், “பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, கருவூலத்துக்கு நிதிச்சுமை ஏற்படவில்லை. இதற்காக சிறப்பு ஓய்வூதிய நிதியை உருவாக்க ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 700 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிதியில் தொகை டெபாசிட் செய்யப்படும். அதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.” என்றார்.

மேலும் படிக்க | Old Pension சூப்பர் செய்தி: இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், NPS ரத்து!!

2035 முதல், ஓய்வூதியத்தின் மீதான கூடுதல் சுமை ரூ. 8,000 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளது

முன்னதாக நவம்பர் 1, 2022 அன்று ஜார்க்கண்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. டிசம்பர் 2004 க்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஓபிஎஸ் வரம்பிற்குள் வந்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் வழங்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 8,000 கோடி ரூபாய் அரசு நிதியிலிருந்து செலவிடப் போகிறது. தற்போது 70,000 நிரந்தர அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து 1.25 லட்சம் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு, ஓய்வூதியம் போன்றவற்றில் ரூ.175 கோடியுடன் சேர்த்து, ஆண்டு ஓய்வூதியத்தின் பொறுப்பு ரூ.30 கோடியாக உயரும். அதே சமயம், 2035ல் இருந்து, பென்ஷன் மீதான கூடுதல் சுமை, எட்டாயிரம் கோடி ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், ஜார்க்கண்டில் அமல்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் பல மாநிலங்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் நிதிச் செயலாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்திருந்தனர். இதனுடன், மகாராஷ்டிராவின் நிதிச் செயலாளரும் அடுத்த வாரம் ராஞ்சிக்கு வர உள்ளார்.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பயன்கள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நேற்று தஞ்சாவூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறிய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது என்றும், மாநில அரசு, அரசு ஊழியர்களின் நலனில் மிக கவனமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக பல ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருப்பதகவும், தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | Old Pension Scheme சூப்பர் அப்டேட்: முக்கிய கூட்டம்.... விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News