மே மாதம் இந்த 3 ராசியினரின் அதிர்ஷ்டம் மின்னும், தொட்டது துலங்கும்

May 2022 Lucky Zodiac Signs: மே மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2022, 02:24 PM IST
  • மே மாத 2022 ராசிபலன்
  • 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்
  • காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்
மே மாதம் இந்த 3 ராசியினரின் அதிர்ஷ்டம் மின்னும், தொட்டது துலங்கும் title=

2022 மே மாதம் கிரக மாற்றங்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பல பெரிய கிரகங்கள் இந்த மாதம் தங்கள் ராசியை மாற்றும். இதனுடன் இந்த மாதத்தில் சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. மே மாதம் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ராசிகளில் மாற்றம் ஏற்படும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றங்கள் காரணமாக, மே மாதம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இவை எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன. முதலீட்டிற்கு சாதகமாக இருக்கும். பல இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும் வாய்ப்புகள் இருக்கும். காதல் உறவுகளின் அடிப்படையில் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலை நன்றாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் பங்குதாரருடன் நல்லுறவு ஏற்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யலாம். திருமணமானவர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

சிம்மம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம். அதிர்ஷ்டம் எல்லாவற்றிலும் உங்களை ஆதரிக்கும். பணியிடத்தில் சில பெரிய பொறுப்புகளை காணலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் வெற்றிகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய இது நல்ல நேரம். எங்கிருந்தாவது பண வரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News