ஜூன் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ஜூன் மாதம் அமோகமாக இருக்கும், தொட்டது துலங்கும்

June 2020 Horoscope: சனி பகவான் இந்த மாதத்திலிருந்து பிற்போக்கு நகர்வைத் தொடங்க உள்ளார். இது தவிர சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2022, 01:38 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் 2022 மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான நிதிப் பலன்கள் கிடைக்கும்.
  • காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஜூன் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ஜூன் மாதம் அமோகமாக இருக்கும், தொட்டது துலங்கும் title=

ஜூன் மாத ராசிபலன்: ஜூன் 2022 பல அம்சங்களில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த மாதத்தில் கிரகங்களின் நிலையில் 5 முக்கிய மாற்றங்கள் ஏற்படும். 

நீதியின் கடவுளான சனி பகவான் இந்த மாதத்திலிருந்து பிற்போக்கு நகர்வைத் தொடங்க உள்ளார். இது தவிர சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றும். கிரகங்களின் இந்த பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல மற்றும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். 

ஜூன் மாதத்தில் நிகழவுள்ள கிரக மாற்றங்களால் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு நேரம் மிக நன்றாக இருக்கும். இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அபரிமிதமான வெற்றிகள் கிடைக்கும். பண வரவும் அதிகரிக்கும். 

ஜூன் 2022 இன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

மேஷம்: 
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் 2022 மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் வெற்றியைப் பெறுவார்கள். மேஷ ராசியில் இருக்கும் மாணவர்களும் இந்த மாதம் பெரிய வெற்றியைப் பெறலாம். 

எனவே நேர்மறை சிந்தனையுடன் கடினமாக உழைக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மேஷ ராசிக்காரர்களின் கனவு இந்த மாதத்தில் நிறைவேறலாம். பண வரவு சாதகமாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

மேலும் படிக்க | வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா: சனீஸ்வரரின் பிறந்தநாளன்று செய்ய வேண்டிய தானங்கள் 

ரிஷபம்: 
ஜூன் 2022 ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான நிதிப் பலன்களைத் தரும். பணம் ஈட்ட பல வழிகள் பிறக்கும். ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். உங்கள் அத்தியாவசிய செலவுகளை முடித்த பிறகு, இந்த மாதம் அதிக தொகையை சேமிக்கவும் முடியும். 

வேலை தேடும் ரிஷப ராசிக்கார்ரகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் இனிமையான தருணங்களை அனுபவிப்பீர்கள். 

மிதுனம்: 
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் தொழிலில் நல்ல பலன்களைத் தரும். உங்களுக்கு இந்த மாதம் பணி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 

சில மிதுன ராசிக்காரர்களின் பணி-பொறுப்பில் மாற்றம் வரலாம். வருமானம் கூடும். காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மன குழப்பம் இருக்கலாம். எனினும், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் நல்ல மகிழ்ச்சியை அடைவீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நட்புக்காக உயிரையும் கொடுக்கும் ராசிகள் இவைதான்: உங்க நண்பருக்கு இந்த ராசியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News