Male Domination: பூமியில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகம்! காரணம் இதுதான்!

உலக வங்கியின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் 810 பெண்கள் கர்ப்பம் அல்லது பிரசவம் தொடர்பான சிக்கல்களால் இறக்கின்றனர் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 4, 2021, 01:41 PM IST
  • ஆண் பெண் விகித அளவில் தொடர்ந்து சரிவு
  • ஆண் குழந்தையே தேவை என்ற கலாச்சார விருப்பத்தின் எதிர்வினை
  • கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருவை கலைப்பது பாலின ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படை
Male Domination: பூமியில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகம்! காரணம் இதுதான்!    title=

உலகில் ஆண் பெண் விகித அளவில் தொடர்ந்து சரிவு ஏற்படும் போக்கு தொடர்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் 810 பெண்கள் கர்ப்பம் அல்லது பிரசவம் தொடர்பான சிக்கல்களால் இறக்கின்றனர்.

ஒரு புதிய ஆய்வின்படி, ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருவை கலைப்பது பாலின ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படையாக இருக்கிறது. இதற்குக் காரணம் ஆண் குழந்தையே தேவை என்ற "கலாச்சார விருப்பம்" ஆகும். இது உலக அளவில் பெண்களின் எண்ணிக்கை குறைவதற்கு  அடிப்படையாக காரணமாக அமைகிறது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.  

1970 முதல் 2017 வரை 45 மில்லியன் கருக்கள், கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்காகவே கருவறுக்கப்பட்டிருக்கிறது என பிஎம்ஜே உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு கருவை கலைக்கும்போது ஒரு குழந்தை தானே என்று தோன்றலாம்.

ஆனால், 47 ஆண்டுகளில் உலகளவில் நான்கரை கோடி கருக்கள், அவை பெண்களாக பிறக்கும் என்பதற்காகவே கலைக்கப்பட்டன என்பது கலாச்சார விருப்பங்களுக்காக செய்யப்படும் கருகலைப்பின் எதிர்வினையை எதிர்விளைவாக காட்டுகிறது. 1970 களில் இருந்து தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஆண் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

Also Read | Home Remedies For White Discharge: வெள்ளைபடுகிறதா? கவலை வேண்டாம், சுலபமான தீர்வு…

பாலியல் தேர்வு அதாவது ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற விருப்பமானது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நாடுகளின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி "நீண்டகால பாலியல் ஏற்றத்தாழ்வுகளுக்கு" வழிவகுக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நாடுகளில், இப்போதிருந்து 2100ம் ஆண்டுக்குள் 5.7 மில்லியன் கருக்கள், பெண் குழந்தைகளாக இருப்பதால் மட்டுமே கலைக்கப்படலாம் என்றும், உலக அளவில் பாலின விகிதத்தில் குழந்தை பிறப்பு (sex ratio at birth (SRB)) தேர்ந்தெடுக்கப்படும் ஆபத்தில் நாடுகளிலும் ஆண் குழந்தை தேர்வு தொடர்ந்தால் 2100 ஆண்டுக்குள் 22.1 மில்லியன் பெண்குழந்தைகள் பிறக்கும் முன்னே இறக்கும் என்ற கவலை தரும் விஷயத்தை தரவாக ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

சஹாராவை ஒட்டியுள்ளஆப்பிரிக்கப் பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறிபிடத்தக்க அளவு குறையும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
எதிர்கால பெற்றோர், பாலின பாகுபாடு பார்க்காமல் இருப்பதை உறுதி செய்யும் அளவில் வரவுருக்கும் ஆண்டுகளில் சமூக கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும், இதை மையமாக கொண்டு கொள்கை திட்டமிடல் தேவை என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.

Read Also | Weight Loss: எடை இழப்பு மாத்திரைகள் பலன் தருமா? பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?

இந்த ஆய்வு 2100 வரை அனைத்து நாடுகளுக்கும் பிறப்பு மற்றும் பெண் பிறப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, உலகெங்கிலும் நாள்தோறும் 810 பெண்கள் கர்ப்பம் அல்லது பிரசவம் தொடர்பான சிக்கல்களால் இறக்கின்றனர்.

மேலும், ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாக கொடுப்பது போன்ற சமூக முரண்பாடுகள் ஒருபுறம். மறுபுறம், குடும்பத்திலும், வீடுகளிலும் பெண்கள் ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளை அதிகமாக செய்கின்றனர். பொதுவாக சாதாரண குடும்பங்களில் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்கள் உழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

பொதுவாக பெண்களுக்கு  1 முதல் 5 மணிநேரம் வரை ஊதியமில்லாத வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு மற்றும் பிற குடும்ப வேலைகள் இருக்கின்றன என்று  இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கான ஏற்றத்தாழ்வான இந்த சூழ்நிலை தொற்றுநோய் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று உலக வங்கி தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

 

Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News