Navratri 2021: இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்...

இன்று  நவராத்திரி திருவிழா, வழக்கத்தை விட இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது! ஏன்? தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 7, 2021, 06:15 AM IST
Navratri 2021: இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்... title=

நவராத்திரி அக்டோபர் 7 வியாழக்கிழமையான இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் விஜயதசமி வரை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா, வழக்கத்தை விட இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது.

சனாதன தர்மத்தில் நவராத்திரி மிகப் பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது. சார்தியா நவராத்திரி புரட்டாசி மாதத்தின் வளர்பிறை நாளான அக்டோபர் 7ம் தேதி வியாழக்கிழமையன்று தொடங்குகிறது.

இந்த ஆண்டு சாரதா நவராத்திரி 8 நாட்கள் மட்டுமே கொண்டாடப்படும். அதற்கு காரணம் இந்த ஆண்டு சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதி ஒரே நாளில் வருகிறது.  

Also Read | தானங்களும் அவற்றின் பலன்களும் 

நவராத்திரி பண்டிகையின்போது, ஆலயங்களிலும் வீடுகளிலும் பூசைகளும் வழிபாடுகளும் களைகட்டும். அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கும் நவராத்திரி பூஜையில் முதலில், நல்ல நேரத்தில் கலசம் வைத்து பூஜைகள் தொடங்கப்படுகின்றன.

நவராத்திரியன்று கலச ஸ்தாபனத்திற்கு உகந்த நேரம் காலை 6.17 முதல் காலை 7.07 வரை ஆகும். அதன்பிறகு, நண்பகல் 11:44 முதல் 12.31 வரை நல்ல முஹூர்த்த நேரம் இருக்கும் என்பதால் அப்போதும் கலசத்தை வைக்கலாம். 

இந்த நவராத்திரி, வைத்ரிதி யோகா, செளபாக்ய யோகா மற்றும் 5 ரவி யோகா (Vaidhriti Yoga, Saubhagya Yoga and 5 Ravi Yoga) என யோகங்களை கொடுப்பது சிறப்பாகும். அதோடு,  சித்திரை நட்சத்திரத்தில் நவராத்திரி தொடங்குவதும் ஒரு நல்ல அறிகுறியாகும்.

எனவே, இந்த நவராத்திரி நாட்களில் எந்த வேலையும் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த நாட்களில் நிலம், வாகனம் அல்லது பொருட்கள் என புதிய பொருளை வாங்குவதும் நல்லது. இது தவிர, சில ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நவராத்திரியில் ஒரு சிறப்பான சம்பவத்தை எதிர்பார்க்கலாம்.

READ ALSO | அன்னதானம் தெரியும், அது என்ன அன்ன தோஷம்? 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நவராத்திரி அதிர்ஷ்டம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஏற்கனவே சொன்னது போல, நவராத்திரி சித்திரை நட்சத்திரத்தில் தொடங்குவது தான். அதன் விளைவு துலாம் மற்றும் கன்னி ராசியில் தெரியும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கும் நல்ல காலம் தான். அவர்கள் தங்கள் பொறுப்புகளை நன்கு அறிந்திருப்பார்கள், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நட்பானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நவராத்திரியில் அன்னையின் வழிபாடு:  

அக்டோபர் 7: நவராத்திரி முதல் நாளில் அன்னையை ஷைலபுத்திரியாக வழிபடுவார்கள்.

அக்டோபர் 8: இரண்டாம் நாளில் அன்னை பிரம்மசாரிணியின் வழிபாடு

அக்டோபர் 9: நவராத்திரியின் மூன்றாவது நாளில் அன்னை சந்திரகாந்தா மற்றும் அன்னை குஷ்மாண்டா வழிபாடு

அக்டோபர் 10: நான்காவது நாளில் அன்னை ஸ்கந்தமாதாவை வழிபடும் நாள்.

அக்டோபர் 11: காத்யாயனி அணியை ஐந்தாம் நாள் வழிபட்டு வாழ்வில் வெற்றி பெறலாம்.  

அக்டோபர் 12: ஆறாம் நாளில் அன்னை காலராத்திரியை வழிபடுவோம்.  

அக்டோபர் 13: நவராத்திரியின் ஏழாம் நாளில் மகாகவுரி அன்னையை வழிபடுவோம்.  

அக்டோபர் 14: நவராத்திரியின் எட்டாம் நாளில் அன்னை சித்திதாத்திரியின் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

ALSO READ | குபேரனுக்கு வட்டி கட்டும் பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள்  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News