பசி எடுத்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி. பசி என்பதை போக்க அன்னம் என்ற மருந்து தேவை. பசிப் பிணியில் இருப்பவர்களுக்கு அருமருந்து உணவு.
ஆனால், என்ன தான் பிடித்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் உணவை உண்ண முடியாது. ஆனால், அதே அன்னத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தானமாக கொடுத்து பலரின் பசிப்பிணியை ஆற்றலாம்.
அன்னத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. ஆனால், அன்னத்திற்கு தோஷம் இல்லையென்றாலும், மனிதர்களுக்கு அன்ன தோஷம் உண்டு. அன்ன தோஷத்தால் பாதிக்கப்பட்ட்வர்களின் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும்.
சில கோடீஸ்வரர்கள் உணவு உண்ண நினைக்கும் சமயத்தில் சாப்பிட முடியாமல் வேறு வேலையோ அல்லது மனம் அல்லது உடல் சரியில்லாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அல்லது உணவு உண்பதில் ஈடுபாடு தோன்றாது.
Also Read | நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா?
கோடிக்கணக்கில் காசு இருந்தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாது. இதனால் ஏன் இந்த வாழ்க்கை? என்று கலங்கி போவார்கள்.
பணக்காரர்களுக்கு அன்ன தோஷம் இப்படி படுத்தும் என்றால், ஏழைகள் நிலையோ இன்னும் பரிதாபம், பசி இருக்கும். விரும்பியதை சாப்பிட உடலில் ஆரோக்கியமும் இருக்கும். ஆனால் கையில் காசு இருக்காது. வாழ்க்கையில் பற்றாக்குறை மட்டுமே அவர்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். எப்போதும் தரித்திர நிலையையே அவர்கள் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட அன்ன தோஷம் ஏன் ஏற்படுகிறது? ஏழை, எளியவர்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவர்களுக்கு அன்ன தோஷம் ஏற்படும்.
Also Read | ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips
அதேபோல வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் பசித்து இருக்கும் சமயத்தில் தாங்கள் மட்டும் சாப்பிடுபவர்களையும் அன்ன தோஷம் பீடிக்கும்.
அதேபோல் பிறரை சாப்பிடகூட விடாமல் வேலை வாங்குபவர்களுக்கும் அன்ன தோஷம் பீடிக்கும்.
உணவு சாப்பிட அமர்ந்தவர்களை சாப்பிட விடாமல் சண்டை போட்டு விரட்டி அடிப்பவர்களுக்கும், போதுமான் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களுக்கும் அன்ன தோஷம் ஏற்படும்.
சிறு குழந்தைகளை பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்களுக்கும் அன்ன தோஷம் ஏற்படும்.
Also Read | பிலவ வருட தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்றால், ஆண்டு முழுவதும் மங்கா செல்வம் கிடைக்கும்?
இந்த அன்ன தோஷம் ஏற்பட்டவரக்ள், வெள்ளிக் கிழமைகளில் அன்னை அன்னபூரணியை வழிபட வேண்டும்.
அன்னபூரணிக்கு பால் நிவேதனம் செய்ய வேண்டும். வெள்ளை மலர் கொண்டு அன்னை அன்னபூரணிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
முடிந்த வரையில் ஏழைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு அன்ன தானம் செய்யஏண்டும்.
இதுபோன்ற எளிமையான பரிகாரங்களால் அன்ன தோஷம் அகலும்.
ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR