Post Office திட்டங்களுக்கு புதிய விதி: 20 லட்சத்துக்கு மேலாக பணம் எடுக்க 2% TDS

அனைத்து தபால் அலுவலக கணக்குகளிலிருந்தும் மொத்தமாக எடுக்கப்படும் தொகை ஒரு நிதியாண்டில், 1 கோடியைத் தாண்டினால், அந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு 5 சதவீத TDS-ஐ கட்ட வேண்டி இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 30, 2021, 02:15 PM IST
  • TDS குறித்து தபால் துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • ஜூலை 1 முதல் இந்த புதிய விதி பொருந்தும்.
  • சம்பந்தப்பட்ட வட்டங்களுக்கு தேவையான விவரங்களை CEPT வழங்கும்.
Post Office திட்டங்களுக்கு புதிய விதி: 20 லட்சத்துக்கு மேலாக பணம் எடுக்க 2% TDS title=

அனைத்து தபால் நிலையத் திட்டங்களிலிருந்தும், மொத்தமாக ரூ .20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் கழிக்கப்படும் TDS-க்கு தபால் துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதில் PPF-லிருந்து எடுக்கப்படும் தொகையும் அடங்கும். வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 194N இன் கீழ், ஒரு முதலீட்டாளர் முந்தைய மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், மூலத்தில் (TDS) கழிக்கப்படும் வரி, அவர் திரும்பப் பெறும் தொகையிலிருந்து கழிக்கப்படும். 

தபால் அலுவலகம், PPF TDS விதிகள்
விதிகளின்படி, ஒரு முதலீட்டாளர், ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில், 20 லட்சத்துக்கு மேலாகவும் 1 கோடிக்கு மிகாமலும், பணத்தை எடுத்து, அவர் வருமான வரி (Income Tax) அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என்றால், 20 லட்சத்தை மிகும் தொகைக்கு 2 சதவீதத்தில் TDS கழிக்கப்படும். ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி ஜூலை 1 முதல் இந்த புதிய விதி பொருந்தும். 

அனைத்து தபால் அலுவலக (Post Office) கணக்குகளிலிருந்தும் மொத்தமாக எடுக்கப்படும் தொகை ஒரு நிதியாண்டில், 1 கோடியைத் தாண்டினால், அந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு 5 சதவீத TDS-ஐ கட்ட வேண்டி இருக்கும். 

ALSO READ: Post office சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!

நீங்கள் முறையாக வருமான வரியை தாக்கல் செய்பவராக இருந்து, நீங்கள் மொத்தமாக எடுக்கும் தொகை ஒரு நிதியாண்டில் 1 கோடிக்கு மேல் இருந்தால், 1 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு 2 சதவீத வருமான வரியைக் கட்ட வேண்டி இருக்கும். இந்த மாற்றங்கள் இன்னும் செயல்முறையில் இணைக்கப்படவில்லை.

TDS-ஐக் கழிக்க அஞ்சல் அலுவலகங்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், தபால் நிலையங்களுக்கான தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான CEPT, 2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் இத்தகைய வைப்பாளர்களின் விவரங்களை அடையாளம் கண்டு பிரித்தெடுத்துள்ளது. 

சம்பந்தப்பட்ட வட்டங்களுக்கு தேவையான விவரங்களை CEPT வழங்கும். கணக்கு, வைப்புத்தொகையாளரின் PAN மற்றும் கழிக்க வேண்டிய TDS தொகை போன்ற விவரங்கள் CEPT மூலம் அளிக்கப்படும். வைப்புத்தொகையாளரின் அந்தந்த தபால் அலுவலகம் TDS-ஐக் கழிக்கும். பின்னர் இது குறித்து கணக்கு வைத்திருப்பவருக்கு அறிவிக்கப்படும்.

ALSO READ: Post Office கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு Good News... விபரம் உள்ளே..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News