Post Office கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு Good News... விபரம் உள்ளே..!!!

இந்தியா போஸ்டின் (India Post)  இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றும் தபால் நிலையத்தில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 7, 2021, 06:05 PM IST
  • இந்தியா போஸ்டின் (India Post) இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றும் தபால் நிலையத்தில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, அந்த வங்கி டெபிட் கார்டுகளுக்கு உள்ள வரம்பின் அடிப்படையில் வங்கிகள் பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன.
Post Office கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு Good News... விபரம் உள்ளே..!!! title=

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தியக இந்தியா போஸ்ட் தபால் அலுவலக GDS (கிராம தபால் சேவை) கிளைகளில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறும், அதாவது வித்ட்ரா செய்யும் வரம்பை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்தியா போஸ்டின் அறிவிப்பின்படி, தனிநபருக்கான  வரம்பு ரூ .5 ஆயிரத்திலிருந்து ரூ .20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணத்தை திரும்பப் பெறும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் சேமிப்பை செய்ய ஊக்குவிக்கப்படுவதோடு வங்கிகளைப் (Banks) போல் முதலீட்டை பெறவும் வழி வகுக்கும். மேலும் தபால் அலுவலகத்தில் செய்யப்படும் முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா போஸ்டின் (India Post) இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றும் தபால் நிலையத்தில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்மைய காலங்களில் தபால் நிலையத்ஹ்டில் செய்யப்படும் முதலீடுகள் குறந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, அந்த வங்கி டெபிட் கார்டுகளுக்கு உள்ள வரம்பின் அடிப்படையில் வங்கிகள் பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன, ஆனால் பெரும்பாலான ஏடிஎம்களில் (ATM) கிராமப்புறத்தில் ஒரு பரிவர்த்தனையில் ரூ .10,000 க்கு மேல் எடுக்க முடியாது என்ற நிலையே உள்ளது. இந்தியா போஸ்ட்  கொடுத்துள்ள அறிவிப்பின் படி, ஒரு கிராமத்தில் 10,000 க்கு மேல் பணத்தை எடுக்க விரும்பும் கிராம மக்களுக்கு நன்மை பயக்கும்.

ALSO READ | Work From Home: Zoom App வருமானம் 326% அதிகரித்துள்ளது

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாகவும், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ .50 ஆகவும் உள்ளது. நீங்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீட்டுடன் திறக்கலாம். 

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி வீத கணக்கீடு:

ஒரு மாதத்தின் 10ம் தேதி  முதல் மாத இறுதி வரை வைத்துள்ள குறைந்தபட்ச இருப்பு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. மாதத்தின் 10 முதல் கடைசி நாள் வரையிலான இருப்பு ரூ .500 க்கு கீழே இருந்தால், அந்த மாதத்திற்கு வட்டி கிடைக்காது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கணக்கில், வட்டி வரவு வைக்கப்படும். கணக்கு மூடப்படும் நேரத்தில், கணக்கு மூடப்பட்ட முந்தைய மாதம் வரை வட்டி செலுத்தப்படும்.

ALSO READ | அலுவலகத்தில் பாஸ் உடன் மோதலா... இதோ உங்களுக்காக 4 முக்கிய டிப்ஸ்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News