துபாயில் skydiving செய்யும் ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மாலத்தீவில் தனது விடுமுறையை உல்லாசமாக கழித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் அது தொடர்பான பதிவில் புகைப்படங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2021, 10:21 PM IST
துபாயில் skydiving செய்யும் ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா title=

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மாலத்தீவில் தனது விடுமுறையை உல்லாசமாக கழித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் அது தொடர்பான பதிவில் புகைப்படங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

ஒலிம்பிக் சாம்பியன் அண்மையில் பகிர்ந்துக் கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் துபாயில் தனது முதல் ஸ்கை டைவிங் அனுபவத்தை அனுபவிப்பதை பதிவிட்டுள்ளார். மாலத்தீவில் தரமான நேரத்தை செலவழித்த பிறகு, துபாயில் சாகசங்களை மேற்கொள்கிறார் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் சாம்பியனால் பகிரப்பட்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகையில், அவர் துபாயில் தனது முதல் ஸ்கை டைவிங் அனுபவத்தை அனுபவிப்பதை காணலாம். நீரஜ் அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, எழுதினார்: 

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

"விமானத்தில் இருந்து குதிக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் குதித்ததும் ஜாலியாக இருந்தது". இந்த அனுபவத்தால் மகிழ்ச்சியடைந்த 23 வயதான அவர் தனது ரசிகர்களை துபாயில் சாகசத்தை முயற்சிக்குமாறு கூறினார்.

Also Read | Olympic தங்க மகன் நீரஜ் சோப்ராவின் ஸ்கூபா டைவிங் வீடியோ வைரல்

நீரஜ் சோப்ராவின் ஜெர்மன் பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனியெட்ஸை "சிறந்த கோச்" என்று விவரித்தார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் விளையாட்டுகளிலும், தனது பயிற்சியாளரே தனக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றும், தங்களது கூட்டணி அற்புதமானது, அது தொடர வேண்டும் என விரும்புவதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பார்டோனியெட்ஸின் முறைகள் தனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக நீரஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. "சில நேரங்களில், பயிற்சி அமர்வுகளின் போது நான் மிகவும் தீவிரமாக பயிற்சி செய்ய விரும்பவில்லை. சில பயிற்சியாளர்கள், பயிற்சி செய்தே தீரவேண்டும் என்று தடியுடன் நிற்பார்கள்). ஆனால் கிளாஸ் சார் வித்தியாசமானவர் என்று தெரிவித்தார். 

"பயிற்சியில் இருக்கும்போது நாம் தீவிரமாக இருப்போம், ஆனால் சில நேரங்களில் சீரியஸாக இருக்கமாட்டோம். எனது பயிற்சியாளர், அப்போது நகைச்சுவையாக பேசுவார், அது பயிற்சியை சுவாரஸ்யமாக ஆக்குகிறது. அவருடைய பயிற்சி முறைகள் எனக்குப் பொருந்தும், அவருக்கும் எனக்கும் நன்றாக ஒத்துப்போகிறது என்கிறார் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தடகளப் பதக்கத்தை வென்று வரலாற்றை உருவாக்கிய இளம் நட்சத்திரம், அடுத்த ஒலிம்பிக்கிலும் அவருடன் இணைந்தே பயிற்சி பெற விரும்புகிறார்.

Also Read | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News