உதயப்பூர்: வீடு கட்டுவதற்காக மரங்களையும் செடிகளையும் வெட்டுவது சாதாரணமான விஷயம். அதுமட்டுமல்ல, வீட்டின் கட்டுமானத்திற்கும் மரங்களை பயன்படுத்துகிறோம். இதனால் காடுகள் படிப்படியாக பூமியில் இருந்து மறைந்து வருகின்றன.
ஆனால் மரத்தை வெட்டாமலேயே அந்த மரத்திலேயே கட்டியிருக்கும் அதிசய வீடு இந்தியாவில் இருக்கிறது. அதுவும் இது நான்கு மாடிகளில் கட்டப்பட்ட மாமர வீடு.
ஏரிகளின் நகரம் என்று புகழ்பெற்ற உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. குல் பிரதீப் சிங் என்ற ஐஐடி பொறியாளர், 2000-ம் ஆண்டு நான்கு மாடி வீட்டைக் கட்டினார். 80 வருடங்கள் பழமையான மாமரத்தை வெட்டாமல் அதன் மேல்தான் இந்த வீட்டைக் கட்டியுள்ளனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்த வீடு 'ட்ரீ ஹவுஸ்' (TREE HOUSE) என்றும் அழைக்கப்படுகிறது. காட்டில் வசிப்பவர்கள் கட்டுவது போல் மரத்தால் ஆன வீடாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஒரு 'ஃபுல் ஃபர்னிஷ்டு' வீடு என்று சொல்லலாம். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த வீட்டைக் கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர் குல் பிரதீப் சிங், மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டவில்லை.
மரக்கிளைகளுக்கு ஏற்ப தன் கனவு வீட்டை வடிவமைத்திருக்கிறார் கே.பி.சிங். ஒரு மரக்கிளையை சோபா ஸ்டாண்டாகவும், ஒரு மரக்கிளையை டிவி ஸ்டாண்டாகவும் பயன்படுத்தினார். இந்த வீட்டில் சமையலறை, படுக்கையறை, குளியலறை, சாப்பாட்டு அறை, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
சமையலறை, நூலகம், படுக்கையறை போன்றவற்றிலிருந்து மரக்கிளைகள் வெளியே வந்திருப்பதை படங்களில் காணலாம். இதன் காரணமாக, மரம் காய்க்கும் போது, அது வீட்டிற்குள் தொங்குகிறது. வீட்டில் பல ஜன்னல்கள் நிறுவப்பட்டுள்ளன, இதனால் பல பறவைகள் வீட்டிற்குள் வருகின்றன.
கே.பி.சிங்கின் இந்த கனவு வீடு தரையில் இருந்து 9 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 40 அடி. இந்த வீட்டில் செய்யப்பட்ட படிக்கட்டுகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 4 மாடி வீட்டைக் கட்ட சிமென்ட் பயன்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
இந்த வீட்டை உருவாக்க எஃகு, செல்லுலார் மற்றும் ஃபைபர் தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசினால், இந்த வீடும் மரக்கிளைகளைப் போலவே ஆடும்.
ALSO READ | தாஜ்மஹால் போன்று வீடு கட்டி மனைவிக்கு பரிசளித்த கணவன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR