ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: இதை செய்யவில்லை என்றால் பென்ஷன் கிடைக்காமல் போகலாம்

Life Certificate Submission Deadline:புதிய விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 9, 2022, 08:40 PM IST
  • ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி.
  • ஓய்வூதியம் பெறுவோர் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
  • ஓய்வுபெற்றவர்கள் வாழ்க்கைச் சான்றிதழை தாங்களே எளிய முறையில் சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: இதை செய்யவில்லை என்றால் பென்ஷன் கிடைக்காமல் போகலாம் title=

ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. புதிய விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோர் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும். வாழ்க்கைச் சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பித்தால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து பெறப்படும். 

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 30-லிருந்து பிப்ரவரி 28, 2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த முடிவை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது.

போர்ட்டலில் சமர்ப்பிக்கலாம்

ஓய்வுபெற்றவர்கள் வாழ்க்கைச் சான்றிதழை தாங்களே எளிய முறையில் சமர்ப்பிக்கலாம். இதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/ என்ற இணைப்புக்கு செல்ல வேண்டும். இங்கே பயோமெட்ரிக் மற்றும் அங்கீகாரம் மூலம் வாழ்க்கைச் சான்றிதழை உருவாக்கலாம். இதற்குப் பிறகு, ஸ்மார்ட்ஃபோன் மூலம் மின்னஞ்சல் ஐடி மற்றும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி வீட்டில் அமர்ந்தபடியே வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

வீட்டில் இரூந்தபடியே வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கவும்

ஓய்வூதியம் பெறுவோர் 12 பொதுத்துறை வங்கிகளின் டோர் ஸ்டெப் பாங்கிங் கூட்டணி அல்லது அஞ்சல் துறையின் டோர் ஸ்டெப் பாங்கிங் சேவையைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை தெரிவித்துள்ளது. 

ALSO READ | Pensioners: ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு 

எஸ்.பி.ஐ பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 12 வங்கிகளில் இந்த வசதியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோர் ஸ்டெப் வசதிக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.

சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்

இதுமட்டுமின்றி, ஓய்வூதியம் பெறுவோர் அந்தந்த கிளைக்குச் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இது தவிர, மத்திய அலுவலகத்திற்குச் சென்று நேரடியாகவும் வாழ்க்கைச் சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்.

இந்த ஆவணங்கள் தேவைப்படும்
- ஆதார் எண்
- கைபேசி எண்
- வங்கி விவரங்கள்
- ஓய்வூதிய கணக்கு எண்
- ஓய்வூதிய அனுமதி
- ஓய்வூதியம் செலுத்தும் அமைப்பின் விவரங்கள்

ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு டபுள் போனஸ்; இந்த பெரிய அறிவிப்பு வெளியாகும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News