எலோன் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா!

இறக்குமதி கார்களுக்கு இந்திய அரசு விதிக்கும் வரியை குறைக்க வேண்டி எலோன் மஸ்க் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 06:39 PM IST
  • கார்களுக்கு பதிலாக,உதிரிபாகங்களை இறக்குமதி செய்வது குறித்து டெஸ்லாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது
  • தற்போதைய கட்டணக் கட்டமைப்பில் ஏற்கனவே சில முதலீடுகள் வந்துள்ளன
எலோன் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா! title=

எலோன் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவன மின்சார கார்களை இறக்குமதி செய்ய வரிச் சலுகைகள் தேவை என்ற கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.  மேலும் இந்திய தரப்பில் வாகனங்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய மற்றும் தயாரிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.  தற்போது உள்ள அரசாங்க நெறிமுறைகளை பின்பற்றியே இந்த முடிவை எடுத்து உள்ளோம்.  மேலும், தற்போது உள்ள விதிகளுக்கு கட்டுப்பட்டு சில முதலீடுகளும் வந்து உள்ளன என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் விவேக் ஜோஹ்ரி (Vivek Johri) தெரிவித்துள்ளார். 

ALSO READ | 10 லட்சம் கார்களை விற்பனை செய்து டெஸ்லா சாதனை!

மேலும் அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) நிர்வாகம் டெஸ்லாவை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவித்துள்ளது, அதே நேரத்தில் மஸ்க் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட EVகளுக்கு 100% வரை வரிகளைக் குறைக்க வலியுறுத்துகிறார்.  இந்தியாவில் இருந்து உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்க தரப்பில் இருந்து கேட்டபின்னும் டெஸ்லா அதனை சமர்ப்பிக்கவில்லை.  

musk

முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார்களுக்கு பதிலாக, குறைந்த இறக்குமதி வரியை கொண்ட உதிரிபாகங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்குமாறு டெஸ்லாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.  மின்சார வாகனங்களுக்காக ஏற்கனவே முதலீடு செய்துள்ள மஹிந்திரா லிமிடெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை டெஸ்லா பின்பற்ற வேண்டும். மின்சார வாகனங்களுக்கு தேவையாக பாகங்களை இறக்குமதி செய்யும் வேலை நடைபெற்று கொன்டுதான் உள்ளது.  அதற்க்கான பாதைகளும் திறந்தே உள்ளது.  தற்போதைய கட்டணக் கட்டமைப்பில் ஏற்கனவே சில முதலீடுகள் வந்துள்ளன. அதனால் மற்றவர்களும் ஏன் வர முடியாது? தற்போதைய கட்டண அமைப்புடன் நாட்டில் விற்கப்படும் பிற வெளிநாட்டு பிராண்டுகளும் உள்ளன என்று ஜோஹ்ரி கூறினார்.

tesla

இந்த வார தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரிச் சலுகைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலம் டெஸ்லாவின் கோரிக்கைகளை ஆதரித்துள்ளது.  மேலும் ஐந்து இந்திய மாநிலங்கள் டெஸ்லாவை தங்கள் மாநிலத்தில் நிறுவ அழைப்பு விடுத்துள்ளனர்.  ஹூண்டாய் மோட்டார் மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப் ஆகியவை உள்ளூரில் தயாரிக்கப்பட்டு இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.  தற்போது வரை பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடும் போது மொத்த விற்பனையில் 1% க்கும் குறைவாகவே மின்சார வாகனங்கள் விற்பனை ஆகின்றன. டெஸ்லா 2019 ஆம் ஆண்டிலேயே இந்தியாவிற்குள் நுழைவதற்கான திட்டதை  வெளிப்படுத்தியது, ஆனால் அதிக வரிகள் டெஸ்லா கார்களை அதிகவிலை உள்ளதாக ஆக்குவதாக மஸ்க் கூறினார். அக்டோபரில், ஒரு இந்திய அமைச்சர், சீனாவில் தயாரிக்கப்பட்ட கார்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு டெஸ்லாவிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

ALSO READ | Electric car வருகையால் புதிய உச்சத்தை தொடப்போகும் துறை...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News