காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!

உறவைப் பேணுவது என்பது அனைவருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து ரசிகளின் குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 5 ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள், என கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2022, 04:48 PM IST
  • இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்கள்
  • எந்த விதமான சூழ்நிலையிலும் வாழ்க்கை துணைக்கு ஆதரவாக இருப்பார்கள்
  • தங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்கள்.
காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!! title=

உறவைப் பேணுவது என்பது அனைவருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து ரசிகளின் குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 5 ராசிக்காரர்கள் மிகவும் தங்கள் உறவில் மிகவும் நேர்மையானவர்கள் என்றும் வாழ்க்கை துணையை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள், எனவும் கூறப்பட்டுள்ளது. உறவுகளின் அடிப்படையில் மிகவும் விசுவாசமாக கருதப்படும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: உறவைப் பேணுவதை மேஷ ராசிக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். அது நிறைவேறாமல் போனால் கூட, அவர்கள் எப்போதும் ஒரு உண்மையான நண்பரைப் போல வாழ் நாள் முழுவதும் இருப்பார்கள் . அவர்கள் தங்கள் துணைக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள் மற்றும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள்.

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
 
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் தனது வேர்களை மறக்காதவர்கள். எவ்வளவு உயர்ந்த பதவிக்கு சென்றாலும், வாழ்க்கையில் தனக்கு உதவியவர்களை ஒரு போதும் மறக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் உறவில் நேர்மையானவர்கள், ஒருபோதும் வாழ்க்கை துணையை ஏமாற்ற மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களை மணப்பவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம்.

விருச்சிகம்: மற்றவர்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டாலும், அவர்கள் துணையிடம் செலுத்தும் அன்பு, உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும். அவர்கள் தங்கள் துணைக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள், எந்த சூழ்நிலையிலும் தங்கள் துணைக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்கும், துணைக்கும் இடையே பிரிவினையோ, மனக்கசப்பு ஏற்பட்டாலும் கூட, துணையை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News