பம்பர் செய்தி!! PPF கணக்கில் இனி இரட்டை வட்டி கிடைக்கும்.. விதிகளை மாற்றியது அரசு

Public Provident Fund: பல வித சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் இன்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப் திட்டம்) பணத்தை முதலீடு செய்ய சிறந்த வழியாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2023, 05:11 PM IST
  • நிபுணரின் கருத்து என்ன தெரியுமா?
  • இரண்டு கணக்குகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
  • திருமணமான தம்பதிகளுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.
பம்பர் செய்தி!! PPF கணக்கில் இனி இரட்டை வட்டி கிடைக்கும்.. விதிகளை மாற்றியது அரசு  title=

PPF திட்டத்தின் சமீபத்திய புதுப்பிப்பு: பிபிஎஃப் கணக்கைத் திறப்பவர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதியில் கணக்கு தொடங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படி என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது பிஎஃப் சந்தாதாரர்கள் இரட்டிப்பு வட்டியின் பலனைப் பெறலாம். இது குறித்த தகவல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வித சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் இன்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப் திட்டம்) பணத்தை முதலீடு செய்ய சிறந்த வழியாக உள்ளது. இதில், சிறந்த வருமானத்துடன், முதிர்ச்சியில் பெரும் பலனும் கிடைக்கும். இரட்டிப்பு வட்டியின் பலனை சந்தாதாரர்கள் எப்படி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும்

PPF முதலீடு E-E-E பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றும் முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். நீங்கள் PPF திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும்.

இரட்டை வட்டி பலன் கிடைக்கும்

திருமணமாகி, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கும் சந்தாதாரர்கள், தங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். இந்த வழியில் அவர்கள் இரண்டு கணக்குகளுக்கும் வட்டியின் பலனையும் பெறலாம். 

நிபுணரின் கருத்து என்ன தெரியுமா?

நிபுணரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, PPF இல் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. உங்கள் கணக்கில் ரூ.1.5 லட்சமும், உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொடங்கப்பட்ட கணக்கில் ரூ.1.5 லட்சமும் டெபாசிட் செய்யலாம். இந்த வழியில் நீங்கள் 2 கணக்குகளுக்கு இரட்டை வட்டியின் பலனைப் பெறுவீர்கள். அதே நேரத்தில், ஏதாவது ஒரு கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். இந்த வழியில் உங்கள் PPF முதலீட்டின் வரம்பு 3 லட்சமாக இரட்டிப்பாகும்.

மேலும் படிக்க | PPF மூலம் அதிக லாபம் காண வேண்டுமா? இதை கண்டிப்பாக செய்யுங்கள்

இரண்டு கணக்குகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்

உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் நீங்கள் ஒரு PPF கணக்கைத் திறக்கும் போதெல்லாம், உங்கள் இரு கணக்குகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். இதனுடன், இரண்டு கணக்குகளுக்கும் வட்டியின் பலனைப் பெறுவீர்கள். வருமான வரியின் 64வது பிரிவின் கீழ், உங்கள் மனைவிக்கு நீங்கள் வழங்கிய தொகை அல்லது பரிசில் கிடைக்கும் வருமானம் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும்.

திருமணமான தம்பதிகளுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்

நீங்களும் திருமணமானவராக இருந்தால், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் இரட்டை வட்டியின் பலனைப் பெறலாம். திருமணமான தம்பதிகளின் பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடையும் போது, ​​உங்கள் கூட்டாளியின் கணக்கில் ஆரம்ப முதலீட்டில் இருந்து வரும் வருமானம் உங்கள் வருமானத்தில் ஆண்டுக்கு ஆண்டு சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் தகவல்

நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி உங்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால், அதிலிருந்து அதிக பலன்களைப் பெறலாம். இந்தத் தேதியில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் அதிக வருமானத்தைப் பெற முடியும். பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், அந்த மாதத்திற்கான வட்டி அவர்களுக்கு வழங்கப்படாது.

5 ஆம் தேதி முதலீடு செய்வதால் என்ன பலன்?

முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால், அதன் மூலம் அவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். ஒரு வருடத்தில் பிபிஎப் -இல் ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். எளிமையாக கூற வேண்டுமானால், ஏப்ரல் 20 ஆம் தேதி இந்தத் தொகையை உங்கள் பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்தால், அந்த ஆண்டில் உங்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைக்கும்.  மறுபுறம், இந்த தொகையை ஏப்ரல் 5 ஆம் தேதி கணக்கில் போட்டால், உங்களுக்கு ரூ.10,650 லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சிறுசேமிப்பு திட்ட விதிகளில் பெரிய மாற்றம் செய்த அரசு: இதை உடனடியாக செய்து விடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News