Ration Card பயனாளிகளுக்கு நல்ல செய்தி: இனி பொருட்களின் எடையில் ஏமாற்ற முடியாது

Ration Card Update: அரசு இலவச ரேஷன் பொருட்களுக்கான கால வரம்பை செப்டம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம், இப்போது ரேஷன் கடை ஊழியர்கள் எந்த வித மோசடியிலும் தற்போது ஈடுபட முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2022, 11:38 AM IST
  • ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.
  • ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் (EPOS) உபகரணங்களை மின்னணு தராசுகளுடன் இணைப்பதற்கான உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் திருத்தம்.
  • தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
Ration Card பயனாளிகளுக்கு நல்ல செய்தி: இனி பொருட்களின் எடையில் ஏமாற்ற முடியாது title=

ரேஷன் கார்டு புதுப்பிப்பு: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் பொருட்களுக்கான கால வரம்பை செப்டம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம், இப்போது ரேஷன் கடை ஊழியர்கள் எந்த வித மோசடியிலும் தற்போது ஈடுபட முடியாது. 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு, ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் (EPOS) உபகரணங்களை மின்னணு தராசுகளுடன் இணைப்பதற்கான உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது. ரேஷன் கடைகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உணவு தானியங்களை எடை போடும் போது, எடை குறைக்கப்படுவதை தடுக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

விதி என்ன சொல்கிறது?

என்எஃப்எஸ்ஏ- இன் கீழ் பொது இலக்கு விநியோக அமைப்பின் (TPDS) செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, அதன் மூலம், சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ் எடைபோடப்படும் உணவு தானியங்களுக்கான செயல்முறையை சீர்திருத்துவதற்கான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியே இந்த திருத்தம் என்று அரசாங்கம் கூறுகிறது. 

மேலும் படிக்க | IRCTC Train Ticket Reservation: இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ்,  நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு அரசாங்கம், ஒரு நபருக்கு ஐந்து கிலோ கோதுமை மற்றும் அரிசியை, கிலோவுக்கு முறையே 2-3 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது. .

அதிகாரி ஒருவர் கூறுகையில், "என்எஃப்எஸ்ஏ 2013ன் கீழ் தகுதியுடைய ரேஷன் பயனாளிகளுக்கு மானிய உணவு தானியங்கள் சரியான அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஜூன் 18, 2021 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது."

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? 

இபிஓஎஸ் சாதனங்களைச் சரியாக இயக்கும் மாநிலங்களை ஊக்குவிப்பதற்காகவும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.17.00 கூடுதல் லாபத்துடன் சேமிப்பை ஊக்குவிப்பதற்காகவும், உணவுப் பாதுகாப்பு (மாநில அரசு உதவி விதிகள்) 2015 -இன் துணை விதி (2)-இன் விதி 7-இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியது. 

இதன் கீழ், பாயின்ட்-ஆஃப்-சேல் சாதனங்களின் கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் விலைக்கு வழங்கப்படும் கூடுதல் மார்ஜின் மூலம் ஏதேனும் ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசம் சேமிப்பை செய்ய முடிந்தால், மின்னணு எடை தராசின் கொள்முதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றோடு இரண்டின் ஒருங்கிணைப்புக்காக இது பயன்படுத்தப்படலாம். 

மேலும் படிக்க | Ration Card: ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி, முழு செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News