Shani Nakshatra Peyarchi: சனியின் நட்சத்திர பரிவர்த்தனையால் 8 ராசிகளில் தாக்கம்

ஜோதிடத்தில் சனியின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் இரண்டும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 29ம் தேதி சனியின் ராசியில் மாற்றம் ஏற்படும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2022, 06:21 AM IST
  • சனி பகவான் தற்போது திருவோண நட்சத்திரத்தில் சஞ்சாரிக்கிறார்
  • 2022ல் சனி பாகவானின் ராசி மாற்றம்
  • சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார்.
Shani Nakshatra Peyarchi: சனியின் நட்சத்திர பரிவர்த்தனையால் 8 ராசிகளில் தாக்கம் title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் சனியின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் இரண்டும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 29ம் தேதி சனியின் ராசியில் மாற்றம் ஏற்படும்.

இதனால், சனியின் வக்ரமான பார்வை சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு முன்னதாக, சனீஷ்வரர் தற்போது இருக்கும் ராசியில் இருந்து மாறவிருக்கிறார். சனி தேவரின் இயக்கம் பொதுவாகவே மெதுவானது.

இதன் காரணமாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை வருடங்கள் ஆகும். சனிபகவானின் மாற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ | சனி பெயர்ச்சி 2022: சனியின் தாக்கத்தால் எந்த ராசிகளுக்கு ஏமாற்றம்?

சனி நட்சத்திர பரிவர்தன் 2022 (Shani Nakshatra Parivartan 2022)
ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் சனி தேவன் திருவோண நட்சத்திரத்தில் இருக்கிறார். ஜனவரி 22ம் தேதியன்று உத்திராட நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரத்தில் நுழைந்தார். 

ஏற்கனவே குரு பகவானும் திருவோண நட்சத்திரத்தில் இருக்கும் நிலையில், குருவும், சனியும் ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். மார்ச் 15, 2023 வரை சனி தேவன் இந்த நட்சத்திரத்தில் இருப்பார்.

ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் ராசி மாறுகிறார். இந்த நாளில் சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். கும்ப ராசிக்கு அதிபதி சனி தேவன். ஜாதகத்தில் சனி அசுபமாக இருக்கும் ஜாதகர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

இது தவிர, ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் பார்வையை பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட வேண்டும்.

ALSO READ | ராகு பெயர்ச்சி 2022: ராகுவின் மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரர்கள் வெற்றி மழையில் நனைவார்கள் 

எந்தெந்த ராசிகளில் சனி வக்ர பார்வையுடன் இருக்கும்? 

ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் விளைவாக, சனியின் சஞ்சாரம் கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் தொடங்கும். மறுபுறம், சனியின் மீன ராசிக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும். 

மிதுனம், துலாம் (Zodiac Libra), மகரம் மற்றும் கும்ப ராசிகள் சனியின் தாக்கத்தை பெற்றுக்கும் ராசிகள். மொத்தத்தில் 8 ராசிக்காரர்களுக்கு சனீஷ்வரனின் பார்வை இருக்கும். 

ALSO READ | நேர்மையான இந்த 5 ராசிக்காரர்களை மிஸ் செய்தா நஷ்டம் உங்களுக்குத் தான்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News