ராகு பெயர்ச்சி 2022: ஒவ்வொரு கிரகத்தின் மாற்றமும், இயல்பும், வெவ்வேறு ராசிகள் மீது வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். சில சமயம் இவை வாழ்க்கையையே மாற்றக்கூடிய தாக்கங்களாகவும் இருக்கும்.
ராகு கிரகம் ஒரு ராசியில் (Zodiac Signs) இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 18 மாதங்கள் ஆகும். மற்ற கோள்களைப் போல அதன் இயக்கம் நேராக இல்லாமல் தலைகீழாக இருக்கும். அதாவது, இந்த கிரகம் எப்போதும் பின்னோக்கி நகர்கிறது.
இதன் காரணமாக ராகு எப்போதும் ஒரு ராசியின் முந்தைய ராசிக்குள் நுழைகிறது. ராகு பெயர்ச்சி வரும் ஏப்ரல் 12ம் தேதி நடக்க உள்ளது. அப்போது ராகு செவ்வாயின் ராசி மேஷத்தில் நுழையும். இந்த ராசியில் ராகுவின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.
மிதுனம்: புதனுக்குச் சொந்தமான இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து இடங்களிலும் மரியாதை கிடைக்கும். வெளியூர் பயண யோகமும் உள்ளது. வருமானம் நன்றாக இருக்கும். பணம் சேமித்து வைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள்.
ALSO READ | புதன் அஸ்தங்கம்; இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கதி அதோ கதி
கடகம்: ராகுவின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் தடைபட்ட பல வேலைகளை செய்து முடிக்க ஏற்ற நேரமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். வேறு வேலை தேடுபவர்களுக்கு இது மாற்றத்திற்கான நல்ல நேரமாக இருக்கும்.
பணியிடத்தில் அனைத்து வேலைகளிலும் மேலதிகாரியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு (Cancer) உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
விருச்சிகம்:
வேலை தேடும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். சம்பளம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்பவர்கள், இந்த நேரத்தில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் உங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும்.
தனுசு: இந்த காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு பண உதவிகளும் நிதி நன்மைகளும் கிடைக்கும். சில வேலைகளை நினைத்து இத்தனை காலம் கவலையில் இருந்திருப்பீர்கள், அவற்றில் வெற்றி கிடைக்கும். வேறு நபரிடம் சிக்கியுள்ள பணம் மீண்டும் கிடைக்கும். வேறு பல வழிகளிலும் பணம் கிடைக்கும் (Money Inflow). பணியிடத்தில் பல பெரிய சாதனைகளை செய்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Richest Zodiacs: மகரத்தில் சுக்கிரன் இருந்தால், செல்வத்தில் கொழிக்கும் ராசிக்காரர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR