இங்கிலாந்தில் ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை ‘திகில் சிறை’ என அறியப்படுகிறது. அந்த சிறைச்சாலை குறித்து பல அமானுஷ்ய தகவல்கள் உலாவுகின்றன. அத்தகைய அனுபவத்தை பெற விரும்புவோர், ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலையில் இரவு தங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சிறைச்சாலையில் கொடூரமான சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் 2013 ஆண்டு முதல் திடீரென முடப்பட்டது.
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள சமர்செட் பகுதியில் அமைந்திருக்கும் ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை 1625-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 1950 முதல் குற்றவாளிகள் பலருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட இடத்தை தற்போது தனியார் நிறுவனம் ஒன்று இரவு விடுதியாக மாற்றியுள்ளது. அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் சிறைச்சாலையில் ஒரு முழு இரவை கழித்தனர்.
மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
அவர்களில் ஒருவர் தனது அனுபவம் குறித்து பகிரும்போது, ”சிறையில் என்னுடன் இருந்தவர் திடீரென எழுந்து ஓடினார். என்னவென்று கேட்டதற்கு, யாரோ சத்தமாக உறுமுவது போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினார். ஆனால் நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம்,” என்றார். அமானுஷ்ய அனுபவங்களை விரும்புவோர் ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலையில் தங்க https://www.bitnparanormal.co.uk/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6:30 மணி வரை தங்க அனுமதி உண்டு.
ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை குறித்து அந்த இணையதளத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: ஆயிரக்கணக்கானவர்கள் புதைந்திருக்கும் இந்த சிறைச்சாலையில் நீங்கள் தனியாகத் தங்க விரும்பமாட்டீர்கள். தாழ்வாரத்திலும் நடைபாதையிலும் காலடி ஓசை கேட்கிறது. இரவு நேரங்களில் அமானுஷ்ய உருவங்கள் அங்கும் இங்குமாய் அலைகின்றன.
மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ