Covid-19 Vaccine - Umang App: நாட்டில் முதல் கொரோனா அலையை விட, தற்போது இரண்டாம் அலையில் கொரோனாவின் கோரதாண்டவம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபுறம் இறப்பு எண்ணிக்கையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரொனாவை கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி (Covid-19 Vaccine) போடப்படும் என அறிவித்த மத்திய அரசாங்கம், அதற்காக "அனைவருக்கும் தடுப்பூசி" திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று முதல் பதிவு தொடங்கியது. தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலி அல்லது உமாங் செயலி (Umang App) மூலம் பதிவு செய்யலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும்போது தயவுசெய்து இதை நினைவில் கொள்க:
தடுப்பூசிக்கு உங்கள் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர் பரிந்துரை செய்த மருத்துவ சான்றிதழை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். தடுப்பூசி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் கோவின் ஹெல்ப்லைன் எண் 1075 ஐ அழைக்கலாம்
ALSO READ | 18+ அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி: எங்கே, எப்படி பதிவு செய்வது?
UMANG செயலி மூலம் பதிவு செய்வது எப்படி?
1. உமாங் ஆப் (UMANG App) முகப்புப்பக்கத்தில் இருக்கும், 'கோவின்' (CoWin) தளத்திற்குச் செல்லவும்.
2. "பதிவு செய்யுங்கள் (Register) அல்லது தடுப்பூசிக்கு உள்நுழைக" என்பதைக் கிளிக் செய்க.
3. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு "சமர்ப்பி" (Submit) என்பதைக் கிளிக் செய்க.
4. நீங்கள் மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள், OTP ஐ உள்ளிட்டு "OTP ஐ சரிபார்க்கவும்" என்பதைக் கிளிக் செய்க.
5. ஏதாவதொரு உங்கள் புகைப்பட அடையாள அட்டையை தேர்ந்தெடுத்து, புகைப்பட அடையாள எண், அடையாள அட்டையில் இருக்கும் பெயர், பிறந்த ஆண்டு மற்றும் பாலினம் ஆகியவற்றை உள்ளிடவும். "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்க.
6. தற்போது உங்கள் விவரங்கள் சேர்க்கப்படுகிறது. அது "சரி"யா எனக் கேட்கும். "சரி" என்பதைக் கிளிக் செய்க.
ALSO READ | ஆரோக்யா சேது ஆப் மூலம் கோவிட் தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது?
7. தானாகவே புதிய பக்கத்திற்கு நீங்கள் செல்வீர்கள். அதில் "மேலும் சேர்" பொத்தானைப் பயன்படுத்தி, மேலும் 4 பயனாளிகளை நீங்கள் சேர்க்கலாம்.
8. உங்கள் ஏரியா பின்கோடு அல்லது உங்கள் மாவட்டத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி மையத்தைத் தேடலாம்.
10. தற்போது தடுப்பூசி மையங்களின் பட்டியல் உங்கள் முன்னே தோன்றும். நீங்கள் விரும்பிய மையத்தை தேர்ந்தெடுத்து, தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த "உறுதிப்படுத்து" (Confirm) என்பதைக் கிளிக் செய்க.
11. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அடங்கிய எஸ்எம்எஸ் கிடைக்கும்.
12. நீங்கள் உறுதி செய்யப்பட்ட பக்கத்தை PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம் அல்லது உங்கள் தொலைபேசியில் சேமித்துக் கொள்ளலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR