குரு பகவானின் மாற்றத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: இக்கட்டான 32 நாட்கள்

Astrology: ஜோதிட சாஸ்திரப்படி  32 நாட்கள் வியாழனின் குறிப்பிட்ட நிலை காரணமாக சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2022, 06:52 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உறவு மோசமடையலாம்.
  • வியாழன் அஸ்தமிக்கும் காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
  • மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்காது.
குரு பகவானின் மாற்றத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: இக்கட்டான 32 நாட்கள் title=

குரு அஸ்தமனம் 2022: பிப்ரவரி 13 முதல் சூரிய பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இந்த ராசியில் சூரியன் மாறுவதற்கு முன்பு அங்கு ஏற்கனவே இருந்த வியாழனின் தாக்கம் குறைந்துவிட்டது. குரு பகவான் பிப்ரவரி 19 ஆம் தேதி கும்பத்தில் அஸ்தமித்து மார்ச் 20 வரை இந்த நிலையிலேயே இருப்பார். அதன்பின் மார்ச் 20-ம் தேதி இந்த ராசியில் குரு பகவான் இயல்பு நிலைக்கு வருவார். ஜோதிட சாஸ்திரப்படி  32 நாட்கள் வியாழன் இந்த நிலையில் இருக்கும் போது சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ராசிகளின் மீது குருவின் தாக்கம்

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் வியாழன் அஸ்தமனத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. உயர் அதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பல அதிருப்திகள் வரக்கூடும். 

ரிஷபம்: பணியில் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பணிச்சூழல் சாதகமாக இருக்காது. இது சிக்கலை ஏற்படுத்தும். காரணமில்லாமல் கவலை அதிகரிக்கக்கூடும். 

மிதுனம்: வியாழன் அஸ்மனமாகும் போது மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், கூட்டாண்மை வணிகத்தில் சில நிதி சிக்கல்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், வணிகத்தில் மோசமான விளைவும் ஏற்படலாம்.

கடகம்: வியாழன் அஸ்மனமாகும் போது பணியில் தடைகள் ஏற்படும். சிறிய வேலைகள் கூட வெற்றிபெற அதிக நேரம் எடுக்கும். மன உளைச்சல் இருக்கலாம்.

சிம்மம்: நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உறவு மோசமடையலாம். சமூக அந்தஸ்து எதிர்மறையாக பாதிக்கப்படலாம். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | MARS TRANSIT: சனியின் ராசியில் செவ்வாயின் சஞ்சாரம்! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை 

கன்னி: பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பணியில் அழுத்தம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தனியார் தொழிலில் நிதி இழப்பு ஏற்படலாம். குரு அஸ்தமன காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். ஆனால் மேல் அதிகாரிகள் உங்களை தொந்தரவு செய்யலாம். இதனால் மன உளைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்.

விருச்சிகம்: வியாழன் அஸ்தமிக்கும் காலத்தில் நீங்கள் நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலை பற்றி உங்கள் கவலை அதிகரிக்கக்கூடும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காததால் மனம் சோகமாக இருக்கும்.

தனுசு: குரு அஸ்தமனத்தின் போது கட்டாய இடமாற்றம் அல்லது வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வேலையின் வேகம் மெதுவாக இருக்கும். பணியிடத்தில் நற்பெயர் பாதிக்கப்படலாம்.

மகரம்: குரு அஸ்தமன காலத்தில், குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் வேலையில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்காது. கவலை ஏற்படக்கூடும்.

கும்பம்: வியாழன் அஸ்தமிக்கும் காலத்தில் வாழ்க்கையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். வேலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம். மேலும் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். இது தவிர, இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்க்காத சில பிரச்சனைகளும் வரக்கூடும்.

மீனம்: பணியிடத்தில் அதிக பணிச்சுமையால் மனச் சிக்கல்கள் ஏற்படலாம். வேலையில் ஆர்வமின்மை ஏற்படலாம். வியாபாரத்தில் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆடம்பரமாய் வாழும் பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க மனைவிக்கு என்ன ராசி? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News