உங்கள் மனைவியிடம் மறந்தும்கூட இந்த விஷயங்களை பேசாதீங்க!

கணவன்-மனைவி உறவு என்பது புனிதமானது, அப்படிப்பட்ட உறவில் விரிசல் விழாமல் இருக்க வேண்டுமானால் நாம் சில விஷயத்தை தவிர்க்க வேண்டியது அவசியம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2023, 07:29 PM IST
  • முன்னாள் காதலியின் நினைவுகளை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • உங்கள் மனைவியை பாடி ஷேமிங் செய்யாதீர்கள்.
  • எப்போதும் உங்கள் மனைவிக்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்கள் மனைவியிடம் மறந்தும்கூட இந்த விஷயங்களை பேசாதீங்க!  title=

1) கடந்த கால வாழ்க்கையையும், எதிர்கால வாழ்க்கையையும் பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பற்றி மட்டும் சிந்திப்பதே நல்லது.  உங்கள் மனைவியுடன் இருக்கும்போது அந்த உறவை பற்றி மட்டும் யோசியுங்கள் மாறாக உங்கள் கடந்த கால வாழ்க்கையில் இருந்த காதலியை பற்றி பேச வேண்டாம்.  உங்கள் மனைவியிடம் உங்கள் முன்னாள் காதலியின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் மீது உங்களுக்கு பாசம் இல்லை என்கிற எண்ணம் உங்கள் மனைவிக்கு எழுந்துவிடும்.  உங்கள் மனைவியின் மனதில் அவநம்பிக்கையை ஏற்பட்டுவிடும், அவர்களை ஏமாற்றுகிறீர்களோ என்கிற சந்தேகம் எழுந்து உறவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.  முன்னாள் காதலியின் நினைவுகளை பகிர்வதை தவிர்த்துவிட்டு, உங்கள் மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள், அவர்களுடைய ஆசையை கேட்டறிந்து நிறைவேற்றுங்கள், ஒன்றாக படத்திற்கு செல்வது அல்லது நீண்ட தூரம் பயணம் செய்வது போன்ற மகிழ்ச்சியான விஷயங்களை செய்யுங்கள்.

மேலும் படிக்க | இந்த பொருட்கள் வாங்கும்பொது முழு பணத்தை கொடுக்க வேண்டாம்!

2) பொதுவாக எந்தவொரு நபரையும் பாடி ஷேமிங் செய்வது தவறான ஒன்று, அதிலும் குறிப்பாக உங்கள் மனைவியை பாடி ஷேமிங் செய்வதைத் தவிர்க்கவும்.  நம்முடைய தோற்றத்தில் நாம் கவனமாக இருந்தால் போதும், நமது துணையின் எடையை கருத்தில் கொள்ள வேண்டாம்.  உங்கள் மனைவியின் உடலை பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பதை விட அவர்களது உடலை பற்றி அவர்கள் அதிகம் தெரிந்து வைத்திருப்பார்கள் என்பதால் நீங்கள் அதில் தலையிட வேண்டாம்.  பாடி ஷேமிங் செய்வது அவர்களது மனதை காயப்படுத்தும், சில சமயம் இது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.  உங்கள் மனைவியை பற்றி விமர்சிப்பவராக இல்லாமல் உங்கள் மனைவியை உற்சாகப்படுத்துபவராக நீங்கள் இருங்கள்.

3) பெண்களுக்கு பொது வெளியில் செல்லும்போது தனக்கு பிடித்த ஆண்மகனின் கைகளை பிடித்துக்கொண்டு நடப்பது பிடிக்கும்.  அதனால் உங்கள் மனைவி பொது இடங்களில் உங்கள் கைகளைப் பிடித்தால் அவர்களை எதுவும் சொல்லாதீர்கள், அப்படி செய்தால் எல்லோர் முன்னிலையிலும் உங்கள் உறவை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லை என்பதை இது குறிக்கிறது.  கைகளை பிடிப்பதை தவிர்க்கும்போது உங்கள் துணைக்கு உங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்.  உங்கள் மனைவிக்கு உரிய மரியாதை கொடுத்து அரவணைத்துக் கொள்ளுங்கள், சமூகத்தின் காரணமாக அவர்கள் மீது பாசத்தை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்.

4) எப்போதும் உங்கள் மனைவிக்கு முன்னுரிமை கொடுப்பதில் மாறிவிடாதீர்கள், அதேபோல அவர்களிடம் உனக்கு முன்னுரிமை இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.  அப்படி சொல்வதும் அல்லது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் இருப்பதும் அவர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தும்.  நீங்கள் உங்கள் மனைவிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால் நம் கணவருக்கு நம் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்கிற உணர்வு அவர்களுக்குள் வேரூன்றி விடும்.  முடிந்தவரை உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்தவும், ஆச்சர்யப்படுத்தவும் பழகுங்கள்.

5) உங்கள் மனைவியின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள், அவர்களின் பிரச்சனைகளில் நீங்கள் முடிவுகளை எடுக்காதீர்கள்.  நீங்கள் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடும்போது அது அவர்களின் மனதில் உங்களைப் பற்றிய மிக மோசமான பிம்பத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.   முதலில் உங்கள் மனைவி அவரது பிரச்னையை கூறினால் அதற்கு நன்கு செவி சாயுங்கள், அவர்களுக்கு தீர்வு தேவைப்படாத நேரத்தில் நீங்களாகவே அவர்களுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்க வேண்டாம்.  ஏனென்றால் சில நேரங்களில் அவர்களுக்குத் தேவையானது அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கக்கூடிய ஒரு காது மட்டுமே, தீர்வல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சந்தையில் போலி முட்டைகள்... உண்மையா... போலியா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News