சந்தையில் போலி முட்டைகள்... உண்மையா... போலியா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

Fake Eggs Alert: உடலுக்கு சத்துகளை அளிக்கும் உணவான முட்டையின் தேவை அதிகரித்து வருவதை அடுத்து போலி முட்டைகளின் விற்பனையும் தற்போது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 03:49 PM IST
  • ஆந்திரா, தமிழ்நாடு முட்டை உற்பத்தியில் முதன்மையாக உள்ளன.
  • ஆனால், அதன் நுகர்வில் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது.
சந்தையில் போலி முட்டைகள்... உண்மையா... போலியா என்பதை கண்டுபிடிப்பது எப்படி? title=

Fake Eggs Alert: முட்டை, ஏழை எளிய மக்களின் உணவுகளில் மிகவும் முதன்மையானது எனலாம். உடலுக்கு சத்துகளை அளிக்கும் முட்டை குறைந்த விலையில் கிடைப்பது அதற்கு மிக முக்கிய காரணமாகும். இந்தியா போன்ற நாடுகளில் முட்டைகளின் பயன்பாடு அதன் உற்பத்தியின் அளவை பார்த்தாலே தெரிந்துவிடும். 

முட்டைகளின் தேவை அதிகமாகியுள்ள இந்த காலகட்டத்தில், போலி முட்டைகளும் சந்தையில் அமோகமாக விற்கப்படுகிறது என கூறப்படுகிறது. முட்டையை எந்த சீசனிலும் சாப்பிடலாம். புரதம், கால்சியம் மற்றும் ஒமேகா-3 ஆகியவை முட்டையில் போதுமான அளவில் காணப்படுகின்றன. சில தொழிலதிபர்கள் சந்தையில் போலி முட்டைகளை விற்று உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறார்கள். இதனால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க | ஆரோக்கியமாக இருக்க பெண்களின் உணவில் இருக்க வேண்டிய சூப்பர்ஃபுட்ஸ்

நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகும். ஆனால் முட்டையின் அதிகமாக நுகரும் மாநிலம் தெலுங்கானா தான். தெலங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் தினமும் 75 லட்சம் முட்டைகள் தேவைப்படுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முட்டை தேவையால், போலி முட்டை வியாபாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை வாங்கும் நேரத்தில் முட்டைகளை சரிபார்த்தால், அதனை கண்டுபிடித்துவிடலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். போலி முட்டை அதிக பளபளப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போலியை எவ்வாறு கண்டறிவது?

போலி முட்டைகளை தயாரிக்க அதன் ஓட்டில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். எனவே, போலி முட்டையை நெருப்புக்கு அருகில் வைத்திருந்தால், முட்டையில் இருந்து பிளாஸ்டிக் எரியும் வாசனை வரும், மேலும் அதன் ஓட்டில் தீப்பிடிக்கும்.

இந்த விஷயத்தை மனதில் வைத்து, உங்களிடம் உண்மையான முட்டை இருந்தால், அதை உங்கள் கையால் குலுக்கவும், அதில் இருந்து எந்த சத்தமும் வராது, ஆனால் உங்கள் கையில் ஒரு போலி முட்டையை அசைத்தால், அதிலிருந்து சில சத்தம் வரும். எனவே, முட்டைகளை வாங்கும் முன், இந்த வழியில் அடையாளம் காணவும். ஏனெனில் இவ்வாறு போலி முட்டைகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே போதும்... உங்களுக்கு ரூ. 5 லட்சம் கிடைக்கும் - எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News