அனைவரது இல்லங்களிலும் அஞ்சரை பெட்டியில் தவறாமல் இருக்கும் உணவுகளுள் ஒன்று, கருப்பு மிளகு. நம் உணவில் காரம் சேர்க்கவும், சுவையை சேர்க்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களுள் இதுவும் ஒன்று. இதில் வைட்டமின் சத்துக்களும் ஆண்டி ஆக்ஸிடன்ஸ் மற்றும் நோயெதிர்ப்பு சக்திக்கான பல சத்துக்களும் அடங்கி இருக்கிறது. இதை கொஞ்சமாக எடுத்து நாக்கில் வைத்தாலே காரம் ஜிவ்வென்று ஏறும். இதில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கிறது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், கருப்பு மிளகு முடி வளர்ச்சிக்கும் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் இருக்கும் சத்துக்கள், முடி வளராத இடங்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர உதவும். தலையில் விழும் வழுக்கையையும், முடி கருகருவென அடர்த்தியாக வளரவும் மிளகு உதவுகிறது.
மிளகை சரியான வழிமுறையில் உபயோகித்தால் முடி அடர்த்தியாக வளருவது உறுதி. முடியின் வேர் வரை சென்று உச்சந்தலையில் உள்ள நச்சுக்கள் நீங்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமன்றி முடி கொட்டுவதை தடுக்கவும் முடி அடர்த்தி குறைவாக மாறுவதை மாற்றி அமைக்கவும் மிளகு உதவுகிறது. பொடுகு, முடி கொட்டுதல் போன்ற முடி தொடர்பான பிரச்சனைகளை மிளகு எப்படி சரி செய்கிறது என்பதை பார்க்கலாமா?
மேலும் படிக்க | நீங்காத மஞ்சள் கறையையும் நீக்கி பற்களை வெள்ளையாக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க
பொடுகு பிரச்சனையை எப்படி சரி செய்கிறது?
ஒருவருக்கு தலையில் பொடுகு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உச்சந்தலை வரண்டு போய் இருப்பதாலோ அல்லது அதிக எண்ணெய் பசையுடன் இருப்பதாலோ பொடுகு வரலாம். ஒழுங்காக தலையை அலசவில்லை என்றாலோ, உச்சந்தலையில் அதிக வியர்வை வருவதாலோ சுற்றி இருக்கும் மாசுபாடு காரணமாகவோ பொடுகு பிரச்சனை வரலாம்.
மிளகில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இதனால், தலையில் உள்ள டெட் ஸ்கின் செல்ஸ்களை நீங்கும், மேலும், உச்சந்தலையை சுத்திகரிக்கவும் மிளகு உதவுகிறது. இதில் இருக்கும் கிருமி நாசினி பண்புகளால் பொடுகு தொல்லை நீங்கும்.
முடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது?
மிளகால் செய்த எண்ணெயை சரியான எண்ணெயுடன் சேர்த்து உபயோகிப்பதால் தலை முடி வளர நிறைய வாய்ப்பு இருக்கிறது. பிளாக் பெப்பரை ஆலிவ் எண்ணெயுடன் மிக்ஸ் செய்து உபயோகித்தால் முடி உதிர்வு பிரச்சனைகளையும் முடி அடர்த்தி குறைவாகும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். கருப்பு மிளகு எண்ணெயிலும் ஆலிவ் எண்ணெயிலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் தரும் நிறைய பண்புகள் நிறைந்துள்ளன. இதனால் உங்கள் உச்சந்தலைக்கு இது மிகவும் நன்மை பயக்கும் எண்ணெயாக இருக்கும். இதை தலையில் தடவுவதால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவும். இதை காலம் காலமாக பலர் உபயோகித்து வருகின்றனர்.
முடி குறைவதில் இருந்து எப்படி தடுக்கிறது?
கருப்பு மிளகினை தலையில் தேய்ப்பதால், உச்சந்தலையில் எரிச்சல் ஏற்பட்டு தலையில் உள்ள வளர்ச்சிதை மாற்ற செயல்முறையை ஆரம்பிக்கும். இதனால், முடி வளர்ச்சிக்கு உதவும் செல்லுலார் அளவு அதிகரிக்கும். இதற்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் மிளகில் அடங்கி உள்ளன. மிளகில் உள்ள முக்கிய சத்து ஒன்று முடியின் அடி வேர் வரை சென்று முடி வேறு எதனாலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்கிறது.
மேலும் படிக்க | தண்ணீர் குடிக்கும் போது இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ