உயிர்வாழ்வதற்கு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் அவசியம் என்றால், தண்ணீரும் அவசியம். இது நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நம் உடல்கள் சரியாக இயங்குவதற்கும் உதவி செய்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீரை உட்கொள்ளுமாறு சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குடிநீர் நிலத்தடி நீர், மழைப்பொழிவு அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் இருந்து பெறப்படுகிறது, இவை நாம் குடிக்கும் அளவிற்கு ஏற்றதாக இருக்கிறது. நீர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது மற்றும் நமது உடல் எடையில் 50% (பெண்கள்) முதல் 60% (ஆண்கள்) வரை தண்ணீர் உள்ளது. உடலியல் ரீதியாக, செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் முக்கிய அங்கமாக நீர் உள்ளது. மேலும், இரத்தத்தின் இன்றியமையாத அங்கமாக செயல்படுவதன் மூலம் ஹோமியோஸ்ட்டிக் செயல்பாட்டை உறுதி செய்கிறது.
மேலும் படிக்க | உடனடி சரும பொலிவு வேண்டுமா? கற்றாழையுடன் இதை கலந்து முகத்தில் போடுங்க
தண்ணீர் குடிக்கும்போது நாம் செய்யும் சில பொதுவான தவறுகள்:
நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீர்கள்
ஆயுர்வேதத்தின் படி, நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும்போது, தண்ணீர் கீழ் வயிற்றில் செல்வதால், தண்ணீரிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. தண்ணீர், நின்று உட்கொள்ளும் போது உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, அது உங்களின் உடலுறுப்புகளுக்குச் சென்று சேராமல் உள்ளது.
தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடிக்கவும்
நாம் அனைவரும் முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம் "தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும், சிலர் எட்டு முதல் பத்து கிலாஸ் வரை குடிக்கின்றனர்", உண்மையில் இவை பொதுவான கட்டுக்கதைகள். தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பது மூளையை குழப்பமடையச் செய்யும். நீங்கள் உங்கள் தாகத்தைத் தணிக்கும்போது, உங்கள் உடல் ரிஃப்ளக்ஸ் குறைக்கிறது. இதன் விளைவாக, தாகம் இல்லாத நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல.
சாப்பிட்ட முன்பு அல்லது பின்பு தண்ணீர்
உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், நீங்கள் சரியாக சாப்பிட முடியாது. நீங்கள் சரியாக சாப்பிடவில்லை என்றால் போதுமான ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்காது. மேலும், சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தில் குறுக்கிடுகிறது. குமட்டல் மற்றும் மலச்சிக்கல் கூட இதனால் ஏற்படலாம்.
தண்ணீரை வேகமாக குடித்தால்
தண்ணீரை வேகமாக குடிப்பது நல்ல அல்ல. தண்ணீரை வேகமாக குடிக்கும் போது, வெளியேற வேண்டிய அசுத்தங்கள் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் படிந்துவிடும். தண்ணீரை மெதுவாகவும் சிறிது சிறிதாகவும் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவும்.
குளிர்ந்த நீர் அருந்துவதை தவிர்க்கவும்
நம்மில் பலர் கடுமையான வேலைக்கு பார்த்த பிறகு குளிர்ந்த நீரை பருகுவோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய தீங்கு பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆயுர்வேதத்தின் படி, குளிர்ந்த நீர் வயிற்று சுரப்பு மற்றும் செரிமான அமைப்பின் வெப்பநிலையை சீர்குலைக்கிறது. இப்போது, உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உடல் கூடுதல் ஆற்றலைச் செலவிட வேண்டும். இதன் விளைவாக, உணவை ஜீரணிக்க போதுமான ஆற்றலைக் கண்டுபிடிப்பது கடினம். மேலும், குளிர்ந்த நீர் இரத்த நாளங்களைச் சுருக்கி ஜீரணிக்க கடினமாக்குகிறது. இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கும்.
மேலும் படிக்க | விந்தணுக்களை அதிகரிப்பது எப்படி? ‘இந்த’ உணவுகளை சாப்பிட்டால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ