கையில் வளையல் அணிந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்குமா? ஆன்மிகம் மற்றும் அறிவியலின் பதில்!

இந்திய பெண்கள் கைகளில் வளையல் அணிவது கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மிக மற்றும் அறிவியல் அர்த்தம் என்ன?  

Written by - Yuvashree | Last Updated : Jan 6, 2024, 05:46 PM IST
  • வளையல் அணிவதால் ஏற்படும் பலன்கள்
  • இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்குமா?
  • அறிவியல் மற்றும் ஆன்மிக பதில்கள் இதோ!
கையில் வளையல் அணிந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்குமா? ஆன்மிகம் மற்றும் அறிவியலின் பதில்! title=

இந்தியாவில், திருமணமான பெண்கள் வளையல் அணிவது பழமையான பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து தெரியாமலேயே பலர் தங்கள் கைகளில் வளையல்களை அணிந்து வருகின்றனர். கலாச்சார நம்பிக்கைகளின்படி, வளையல்கள் வளமான திருமண வாழ்க்கை, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த காரணங்களையும், வளையல் அணிவதால் ஏற்படும் பலன்களையும் இங்கு தெரிந்து கொள்வோம். 

ஒரு பெண்ணிற்கு, திருமணம் எனும் நிகழ்வால் அவள் வாழ்வில் பல உறவுகள் நுழைகின்றன. அப்போது, அவள் தனது இரு கைகளிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட வளையல்களால் அலங்கரிக்கப்படுகிறாள். இது குறித்து இது பிரபலமான சமூக ஊடக தளம் ஒன்றில் விவாதம் எழுந்தது. அதில் சிலர், கைகளில் வளையல் அணிவதற்கு பின்னால் உள்ள அறிவியல் அர்த்தங்களை முன் வைத்துள்ளனர். 

அப்படி எழப்பட்ட கருத்துகளை இங்கு பார்க்கலாம்:

>வளையல்கள் இந்தியப் பெண்களின் திருமணத்தைக் குறிக்கின்றன.  பல வண்ணங்களில் இருக்கும் வளையல்கள், இந்திய பாரம்பரியத்தின்  சிறப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுகின்றன. திருமணத்திற்குப் பிறகு வளையல் அணிவது குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியம், நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

>பெண்கள் வளையல்களை அணிவது கலாச்சார காரணங்களுக்காக மட்டுமல்ல, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அவர்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை இன்னும் அழகாக காட்டுகிறது. இந்த வளையல்களில் உள்ள பல்வேறு வண்ணங்களின் வரிசை அவர்களின் பல்வேறு அம்சங்களையும் அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | Pongal 2024: ஜனவரி 14 அல்லது 15? இந்த வருடம் பொங்கல் எந்த தேதியில் வருகிறது?

>மணிக்கட்டில் வளையல்கள் அணிவதால், அவை தசையில் ரத்த ஓட்டம் ஏற்படுத்தும் செல்களிடையே அதிர்வுகளை உருவாக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. சில நம்பிக்கைகளின்படி, மணிக்கட்டு என்பது ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் சமநிலைக்கு உதவும் அக்குபஞ்சர் மருத்துவம் ஆகும் என கூறப்படுகிறது. வரலாற்றை புரட்டி பார்த்தால், சில ஆண்களும் வளையல்களை அணிந்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 

>பெண்கள் பெரும்பாலும் கண்ணாடி வளையல்களைத் தேர்வு செய்கிறார்கள். கண்ணாடி வளையல்கள் எதிர்மறை ஆற்றலைத் தடுத்து நல்ல ஆற்றல்களை அவர்கள் அருகே கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் சிலரிடையே உள்ளது. 

>இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில், வளையல்களால் உருவாகும் மெல்லிசை ஒலி, திருமணமாகாத பெண்களுக்கு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவதாகவும், மற்றவர்களின் மோசமான பார்வையிலிருந்து அவர்களைக் காப்பதாகவும் நம்பப்படுகிறது. வெவ்வேறு வண்ண வளையல்களும் தனித்துவமான அர்த்தங்களைக் கொண்டுள்ளன; உதாரணத்திற்கு, பச்சை நிறம் அமைதியைக் குறிப்பதாகவும், அதே சமயம் சிவப்பு கருவுறுதலுக்கும் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவது ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது. 

>கர்ப்பிணிப் பெண்களும் வளையல் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறார்கள். குறிப்பாக 7 வது மாதத்திற்குப் பிறகு. இதற்கு பின்னால் உள்ள அர்ததமும் பலருக்கு தெரிவதில்லை. 7வது மாதத்திற்கு பிறகு, குழந்தையின் மூளை செல்கள் வளர்ச்சியடைந்து, அவை வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காணத் தொடங்குவதாக நம்பப்படுகிறது. இதனால், வளையல்களின் ஒலி குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்ட உதவும் என கூறப்படுகிறது. இது மன அழுத்தத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்துவதால் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்க்கும் நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | செரிமான கோளாறு சரியாக..சாப்பிட்டவுடன் ‘இதை’ குடியுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News